இன்றே என்னுயிர் போனாலும் போகட்டும்
அன்றே அருள்செய்தான் அந்தக் கண்ணபிரான் (இன்றே)
ஶ்ரீ குருவாய் வந்தான் குழல் எடுத்து ஊதினான்
நீ தான் பரம் என்று நல்ல ராகம் பாடினான் (இன்றே)
வேதன் வினோதன் வேதாந்த சாரன்
நாதன் நல்லவன் நாதாந்தகாரன்
போதன் புலவன் புத்தியில் சிறந்தவன்
ஆதரவாய் வந்து என்னை ஆதரித்தவன் (இன்றே)
அன்று ஞானதேவருக்கு அருள் செய்தவன்
கன்றுகளை மேய்த்தவன் கருணை கொண்டவன்
என்றும் என்னை காப்பவன் ஏகாந்தம் தருபவன்
நன்று அவனை தினம் நினைத்து பணிவேனே (இன்றே)
