கண் பூத்து போச்சுது கண்ணா
உன்னை எதிர் பார்த்து பார்த்து
விண்ணிலே சென்று மறைந்தாயோ
கண்ணிலே படாமல் போனாயோ
கோபியருடன் கூடி குலவ சென்றாயோ
கன்றின் பாலை குடிக்கச் சென்றாயோ
அன்று போல் ஆலிலையில் துயில சென்றாயோ
மன்றுள் காளிங்க நடனம் ஆடச் சென்றாயோ
காட்சி தா
தாட்சண்யம் கொண்டு
திரைக் காட்சியிலாவது வா
ஆட்சி செய்து என்னை
அரவணைத்திடு வா
