நீ அழகானவளா என்பது
எனக்குத் தெரியாது
நீயே என் விழி என்றால்
நான் உன்னைப் பார்ப்பது எவ்வாறு?
நீ நடப்பதைப் பார்த்து
என் இதயம் துடிக்கிறது
தயவு செய்து நின்று விடாதே
என் இதயத் துடிப்பு
நின்று விட்டால் என் செய்வது?
உன்னைப் பார்த்தவுடன்
உலகம் மறைந்து விட்டது!
நான் உன்னைக்
காதலிக்கிறேன் என்று
எப்படி சொல்வது?
கதிரவன் உதித்தால் பகல்
என்கிறார்கள்
மதியவன் எழுந்தால் இரவு
என்கிறார்கள்
ஆனால்
இரண்டும் எனக்கு நீதான்,
உன் அருகாமை எனக்கு வெளிச்சம்
உன் விலகல் எனக்கு இருட்டு!
உன்னை காண்பதற்கு முன்
கவிதைக்குக் கரு தேடுவேன்
இன்று
உன்னைக் கண்டபின்
எழுதுவது எல்லாம்
கவிதையாகி விடுகிறது,
எப்படி என்று தெரியவில்லை!

அருமை சுந்தர கவிஞரே. வாழ்த்துக்கள்
அனுபவித்து எழுதிய வார்த்தைகள். மிகவும் அருமை.