*27.03.2022 அன்று இல்லறத்தில் அடி வைத்த Chi.மணிகண்டனுக்கும் Sow.கோமதிக்கும் அளித்த இனிய வாழ்த்து*
இல்லறத்தில் அடி வைத்தாய்
நல்லறம் தான் குறள் அடி சொல்லும்
கை பிடித்த கோமதியின்
சொல் அறத்தை கேட்டு
செல் அறத்தை சற்று மற!
உனக்கு இனி
விடிகாலை எழுந்திருக்க
வேண்டாம் இனி அலாரம்…
குடிக்கக் காபியுடன்
சங்கீதாவின் சங்கீதக் குரல்தான்!
இனி ஒர்க் ப்ரம் ஹோமுனக்கு
உந்தன் பாஸ் தர மாட்டார்!
சற்று வரேன் என்று சொல்லி
கோமதியை
சுற்றி சுற்றி வந்திடுவாய்!
அதனால்
இனி ஒர்க் ப்ரம் ஹோமுனக்கு
உந்தன் பாஸ் தர மாட்டார்!
நெல்லையப்பர் சந்நிதியில்
இல்லறத்தை ஏற்று விட்டாய்!
தொலைக்காட்சி சொல்வதுபோல்
தொல்லையில்லை மனைவியவள்
இல்லறத்தாள் இனிய துணை!
எந்தன் அனுபவத்தால் இதை நான்
சொல்லுகின்றேன்
எரிந்து விழுந்தாலும்
அவளே சாய்த்து கொள்ள
ஏற்ற துணை!
கல்யாணம் ஆயாச்சு!
கறிகாய் விலையெல்லாம்
இனியுனக்கு தெரிந்து விடும்!
பரிமாறும் பாங்குனக்கு
சரியாக புரிந்து விடும்!
மரியாதை மட்டெல்லாம்
மனப்பாடம் ஆகிவிடும்!
இன்று வரை
உந்தன் கை அலைபேசி
பாட்டர்(pattern)ன்னும் பாஸ்வேர்டும்
உனக்கு மட்டும்தான் தெரியும்
இனிமேல்
யுபிஐ கோடு கூட உன்
மனையாட்டி கை வசம் தான்!
இன்று வரை
நாலாயிரப் பிரபந்தம் போல்
நீளும் பேச்செல்லாம்
நாளை முதல்
இரண்டடி குறள் போல
இனிதாய் சுருங்கி விடும்!
ஈற்றடி அதற்கும் அவள்
சொற்படி இருந்து விடும்!
தெம்புக்கு மருந்தென்பார்
வம்புக்கு தெருவென்பார்
அம்புக்கு விஜயன் என்பார்
கொம்புக்கு காளை என்பார்
எம்புட்டு சொன்னாலும்
அன்புக்கு மனையாள்தான்
அவளை விட வேறில்லை!
பட்டம் பதவி எல்லாம்
இனி உன் பக்கம் தேடி வரும்

அருமை. வாழ்த்துக்கள்