ராகம் : பேகடா
கண் பார்வை போனாலும் போகட்டும்
கவலையில்லை
சூர்தாசர் போல என்றால் எந்தன் (க)
கண்ணன் இருக்கின்றான் கண் முன்னே
மண்ணில் பல கோடி மலிந்து கிடந்தாலும் என்ன? (க)
பார்த்ததெல்லாம் போதும் பார்த்த சாரதியே வேணும்
நீர்த்த உடலிதில் நீல மேக சியாமளன் வசிக்கிறான் பாரும்
வேர்த்து விருவிருத்து ஓடியதெல்லாம் போதும்
கார்த்திடும் கரங்கள் நான்குண்டு காண வேணும் (க)
கண்ணை மூடினால் இருட்டல்ல வெளிச்சம்
கண்ணன் மேனி கார்மேகம் போல மின்னும்
விண்ணில் சூரியன் தெரியாமல் இருந்தாலும்
என்னில் இதயத்தில் ஏகப்பட்ட பிரகாசம் (க)
