பிடிக்கட்டும் பித்து பண்டரினாதன் மீது பாதத்தில் என்றும் நிலைக்கட்டும் நெஞ்சு (பி)
உலக வியவகாரம் ஓயாது எந்நாளும்
கலகம் செய்யும் மனம் குவியாது ஓர்நாளும் (பி)
பணம் தேடி உறவாடி பட்டதெல்லாம் போதும்
மணம் வீசும் பாதத்தில் மகிழட்டும் நாளும்
குணம் மிகும் கண்ணன் உரு காணட்டும் கண்கள்
தனம் பொருள் எல்லாம் தானே வரும் அதனால் (பி)
பைத்தியம் என்று பாரது சொன்னாலும்
வயித்தியம் செய் என்று வாயாலே சொன்னாலும்
குயுக்தியாய் பேசி காதருகே கதறினாலும்
மயக்கம் கொண்டு மன்னவனின் பாதத்தில் (பி)
