மார்க்கண்டேயர்
இறைவனைக் கட்டிக்கொண்டார்
பிறவிக் கட்டு விலகியது
எதிர் விளைவு !
வயது என்றும் சிறியது
வார்த்த புராணமோ பெரியது
நேரமில்லை என்போர்க்கு
நெத்தியடி !
சமாதி
வீட்டைவிட்டு துரத்தப்பட்டான்
காட்டில் கிடைத்தது
பேரின்ப வீடு !
சுரதன்
கோலாவித்வம்ஸிகளிடம்
போரில்
தோற்றவன்
மேதாவித்வத்தினால்
சம்சாரப்போரை
வென்றான் !
மன்னவனாய் இருந்தவன்
மனுவானான்
மேதா விலாசத்தினால் !
மேதஸ்
பசு பக்ஷிக்கும்
அறிவுண்டு என்றுரைத்த
அந்தக்கால
சந்திர போசு !
பகவத் கீதையை
பார்த்தனுக்கு மட்டும்
உரைத்தான் சக்ரதாரி
சாக்த கீதையை
இருவருக்கும் உரைத்த இவர்
ஒரு பக்குவதாரி !
இரத்தம் சிந்தும்
போர்முனையில்
வெளியானது
வேதாந்த கீதை
அகிம்சை ஆசிரமத்தில்
வெளியானது
போரின் கதை
இடமாறு தோற்றப் பிழை !
மதுகைடபன்
காது மலத்தில் தோன்றியவர்
ஐந்து ஆயிரம் வருடம் கழித்து
ஆழி சலத்தில் இறந்தனர் !
நொடியில் மரணம்
தொடையில்
கர்வம் தந்த பரிசு !
நாக்கில் சரஸ்வதி இருந்தும்
கேட்டது மரணம்
நினைவு நல்லது வேண்டும் !
மஹா விஷ்ணு
தூக்கத்தை விட்டு
தொழில் புரிந்ததால்
வரம் கிடைத்தது
வெற்றி பெற !
பிரம்மா
நித்திரா தேவியை
துதித்தார்
யோகநித்திரையே
விழித்தது
துதியின் சிறப்பு
ரக்தபீஜன்
ஒவ்வொரு ரத்த துளியிலும்
கிளைத்தது அரக்கர்
காளிக்கு கிடைத்தது
ரத்த பாயசம் !
தீய எண்ணத்தை விதைத்தால்
அரக்கர் முளைப்பார்
காளியை வேண்டு
குடித்து அழிப்பாள் !
மகிஷாசுர மர்த்தனி
சேட்டை செய்த அசுரனை
வேட்டை ஆடிய வீரி
அசுரக்கோட்டையை அழித்த
அன்புக்கோட்டை !
முக்குண அரக்கனை
மும்முனை சூலத்தால்
மடிய வைத்த மர்த்தனி !
சண்டமுண்டன்
சண்டை இட்டாலும்
“சண்டி” என்ற பெயரை
அன்னைக்கு அளித்தவன்
சும்ப நிசும்பன்
விந்திய வாசினியால்
வேரறுக்கப் பட்டவர்கள்
எஞ்சிய அசுரர்க்கு
ஏது வாழ்வு?
11ஆவது அத்தியாயம்
துக்க அத்தியாயத்தை
துடைக்கும்
தூய அத்தியாயம்
பத்தியுடன் பரதேவதையைத்
துதித்தால்
பிறக்கும்
புதிய அத்தியாயம் !
பலசுருதி
மாறி பெய்யாமல்
மாரி பெய்யும்
மாரியின் மகத்துவம் !
முதலில் வரம்
பெற்றனர் அசுரர் !
சூது கவ்வியது!
சண்டை
முடிவில் வரம்
பெற்றனர் தேவர் !
தர்ம சம்வர்த்தனி !
ஸுராஸுரப் போரை
சிரத்தையாய் படித்தால்
சுரம் கூட சரியாகும்
வரம் தந்திருக்கிறாள்
வீணாகாது !
பவவியாதியைப்
போக்கும்
கருணை லேகியம்
இந்த ஏழுநூறு !
பதிமூன்று குணங்கள்
பிறக்க வைக்கும்
பதிமூன்று அத்தியாயம்
பிறவிநோய் போக்கும் !

அருமை அத்தியாயப்
பெருமை
Super