கைக்கு ஒரு கங்கணம்
இறையை
கையெடுத்து கும்பிட்டதால்
வாயிக்கொரு இனிப்பு
இறையை
வாயார வாழ்த்தியதால்
காதுக்கொரு கடுக்கன்
இறையின்
காதையினைக் கேட்டதால்
மூக்குக்கொரு மூக்குத்தி
இறையில்
மணக்கும் சந்தனமிட்டதால்
காலுக்கொரு சிலம்பு
இறையின்
கோயில் சுற்றி வந்ததால்
அங்கத்திற்கு ஓர் அணி
இறையை
பிரதக்க்ஷிணம் செய்ததால்
பறையறைந்து கூவுவேன்
இறையை பணிய மட்டும்தான்
வாழ்க்கை
இறையில்லை என்பார்க்கும்
இறைவன்
குறையேதும் வைப்பதில்லை
பேரும் புகழும் தருகிறான்
பிறந்த மண் என்கிறான்.
கருணை அவனுக்கிருப்பதால்,
காத்தருள் செய்கிறான்.
மனிதர்காள் உணருவீர்
மனதினாலும் வேண்டுவீர்
மேனியாலும் வணங்குவீர்
இனிய சொல்லால் தருகிறேன்
இந்த கவிதை மன்றத்தில்.
