கோபாலகிருஷ்ண பாரதி (1811 – 1881) இந்தியாவின் தமிழகத்திலுள்ள தஞ்சை மாவட்டத்தில் நரிமணம் என்னும் ஊரில் பிறந்தார். நந்தனார் சரித்திர கீர்த்தனை பாடியவர். அதுதவிர நீலகண்ட நாயனார் சரித்திரம், காரைக்காலம்மையார் சரித்திரம் ஆகிய நூற்களையும் படைத்தார். இறுதிவரை பிரமச்சாரியாக வாழ்ந்தார்
இவரைப் பற்றி சில வரிகள்:
இவர் பெயரில்தான் கோபால கிருஷ்ணன்
பாடியது முழுக்க பரம சிவன்,
சிவ விஷ்ணு பேதம் பார்ப்போர் திருந்துவது நலன்
இவர் பாடல்களுக்கு
இலக்கணம் இல்லை என்று
பிள்ளைவாள் முகவுரை தர மறுத்து இருக்கலாம்!
யாப்பு இலக்கணத்தை விட பக்தி இலக்கியம் பெரியது.
அதனால்தான் நந்தனாரை நம் கண் முன் நிறுத்தினார் கோபால கிருஷ்ணர்
ஐய்யே மெத்த கடினம் என்று பாடினாரே தவிர அவர் பாடல்கள் நாம் பக்தி அடைய மிகவும் சுலபமாக அல்லவா ஆக்கிவிட்டது.
சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா என்று அன்று பாடினார். அவரது பாடலைப் பாடினால்தான் இன்று சபை நிறைகிறது.
எப்போ வருவாரோ என்ற இவரின் பாடலைக் கேட்டால் சிவன் இப்பவே வந்து கலி தீர்த்து விடுவார்.
சிவலோக நாத்னைக் கண்டு சேவித்திடலாம் வாரீர் என்று இவர் பாடினார். நந்தனார் இன்றிருந்தால் செஞ்சுருட்டியில் நாமும் இப்படி பாடி இருக்கலாமே என்று நினைத்திருப்பார் போலும்.
