போருக்கென இனி விழிப்பாய்
(பெண்களுக்கு பெண்குழந்தைகளுக்கு ஏற்படும் அவல நிலை கண்டு அரற்றிய கவிதை.)
பெண்ணின் உரு கண்ணில் பட அதை
விண்ணின் தொழு தெய்வம் என
ஆணின் மனம் நினைத்தல் இங்கு
மண்ணின் விதி ஆதல் வெகுநாளோ
எந்தன் மனை யாளவள் இறைவி எனும்
சொந்தம் எனதவள் காலைத்தொழல் வசமோ
பந்தம் இலை பராசக்தி எனும் வழக்கும்
வந்து விடட்டும்
சந்தைபொருளவள் இல்லை எனும் சாத்திரப்பொருளுறட்டும்
ஒட்டியாணம் மடி பூட்டி ஒருவளாய் நள்ளிரவில்
சுற்றி வரச்சொன்னால் நிர்பயமாய் நடந்திடுமோ
சுட்டும் விழிசுடர்தான் என்ற சொல்லை மறக்கலாமோ அவள்
வாட்டும் வெயில் ஓடி வயல் வேலை செய்தல் போமோ
குடிப்பான் பின் அடிப்பான் என்ற குற்றம் ஆணுக்கென்றறுமோ
படிக்கும்பெண் பித்த ஆணுக்குறவாகும்னிலை போமோ
துடிக்கும் உடல் தன் தாயென்றறம் ஆணின் மனத்தாமோ
விடியல் என்று வருமோ என்று என்றும் எந்தன் மனதேங்கும்
மறந்தாய் பெண்ணே நீ மறவர் குலக்கொழுந்து என்ற பாடல்
தரந்தாழ்ந்தவர் கண்டால் உன் கரத்தாலவர் சிரம்கொய்வாய்
சுரத்தால் பண் பாடும் பெண் முறத்தாலடி மறந்தாள்
இரக்கம் தவிர் என்றே ஒரு புதுமொழியை நீ வகுப்பாய்
விதவிதமாய் அணி புனைவாய் உறம் பெறுவாய்
விதவை எனும் பெயரைக்கொல் வேதம் இனி உனது
சதியாய் உனை செய்தார் ஆண் சரியோ இல்லை சதியோ
விதியோ என நோகாதே வியனுலகை உனதாக்கு
பார்வை அது பிழையானால் பாவை உனக்கேன் பயமே
வேர்வை பட உழைக்கும் நிலை வேண்டாமினி உனக்கு
கூர்ந்தே உனை நோக்கும் கண் குருடாய் ஆகி விடட்டும்
தேர்ந்தே உனை எடுக்கும் படலம் தனித்தே கிடக்கட்டும்
நிர்பயமாய் நீ தெருவில் நட தெய்வம் துணை வரட்டும்
தர்ப்பார் இனி உனது தாய் நாடே இனி உன் சொந்தம்
ஆர்ப்பாட்டம் செயும் ஆணின் கொட்டம் அடங்கிகிடக்கட்டும்
போர்வை படுத்துறங்கும் பெண்ணே போருக்கென இனி விழிப்பாய்
