அப்பாவுக்கு அலுவலகம் பிடிக்கும், அதனால் அங்கேயே இருப்பார்!
தாத்தாவுக்கு சாய்வு நாற்காலி பிடிக்கும், அதனால் அதிலேயே இருப்பார்!
அண்ணனுக்கு ஆன்லைன் கேம் பிடிக்கும், அதனால் லாப்டாப்பிலேயே இருப்பான்!
அக்காவுக்கு ஆடை அணிகலன் பிடிக்கும், அதனால் ஆன்லைன் ஷாப்பிங்தான்!
தம்பிக்கு தாவும் பொம்மை பிடிக்கும், அதனால் எப்போதும் விளையாட்டுதான்!
எனக்கு எப்போதும் என் கைபேசி பிடிக்கும்!
அதனால் எப்போதும் வாட்ஸ்அப்தான்!
ஆனால் அம்மா மட்டும் எப்போதும் சமையல் அறையிலேயே இருக்கிறாள்!
அவளுக்கு சமையல் பிடித்ததால் அல்ல,
எங்கள் எல்லோரையும் பிடித்திருக்கிறது என்பதால்!
