எனக்கு எதுவும் தெரியாது
இந்த நீண்ட உலகில் உள்ளது
எதுவும் எனக்கு தெரியாது (எ)
கண்ணனின் குழலிசை காதில் கேட்கிறது
கண்ணனின் முகமலர் கண்களில் தெரிகிறது
இதைத் தவிர (எ)
அங்கே பாருங்கள் பாதங்கள் தெரிகிறது
இங்கே பாருங்கள் இன்முகம் தெரிகிறது
எதிரே பாருங்கள் மயில் தொகை சிரசில்
குதிக்கிறான் பாருங்கள் காலில் கொலுசுடன் (எ)
இருக்கலாம் ஏராளம் பொருளும் போக்கியமும்
கருக்கலில் எழுந்து கர்மம் செய்யப் போகலாம்
பெருத்த பொருளுடன் பக்கம் பக்கமாய் எழுதலாம்
உருவத்தை அழகாக்க ஓராயிரம் செய்யலாம் ஆனால் (எ)
