இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி!
கண்ணில் தெரிகிறாயா? நீயே கடவுள்!
அறிவுறுத்துகிறாயா? நீயே என் குரு!
அன்னம் இடுகிறாயா? நீயே என் அன்னை!
கை கொடுக்கிறாயா? நீயே என் நண்பன்!
உதவி செய்கிறாயா? நீயே என் உறவு!
வானம் தெரிகிறதா? அதுவே என் விக்ஞானம்!
பூக்கள் மலர்கிறதா? அதுவே என் பூங்காவனம்!
தமிழிசை கேட்கிறதா? அதுவே என் இன்னிசை!
வேதம் ஒலிக்கிறதா? அதுவே என் வேள்வி!
பகலவன் ஒளிர்கிறதா? அதுவே என் விளக்கு!
வெண்ணிலா குளிர்கிறதா? அதுவே என் குளிர் சாதனம்!
காற்று வீசுகிறதா? அதுவே என் மின்விசிறி!
மழை பொழிகிறதா? அதுவே என் குளியலறை!
பிச்சை கேட்கிறார்களா? நானே கர்ணன்!
மெட்டிசைக்கிறேனா? நானே
இசை ஞானி!
கவிதை படைக்கிறேனா? நானே ஆசு கவி!
பெண்களின் முன் நான் பாரதி!
சைக்கிளில் செல்லும்போது நான் சாரதி!
இதுதான் என் உலகம்! இதுவே என் காட்சி!
