விவசாயியின் ஒரு நாள்!
காலையிலே எந்திரிச்சி
கஞ்சி கொஞ்சம் குடிச்சு விட்டு
மாஞ்சி மாஞ்சி வெல செய்ய
வயக்காட்டு பக்கம் போனான்!
களையெடுத்து நீர் பாய்ச்சி
களைச்சு போயி உட்கார்ந்தான்!
வெளச்ச வரும் இந்த போகம் என்று மன
உலச்சளோட எந்திருச்சு
வெயிலு மேல காய்கையில
உயிர விட்டு உழைச்சு நின்னான்!
சாயந்திரம் ஆகி போச்சு
ஓய்வெடுக்க நேரமில்ல!
வரப்ப கொஞ்சம் சரி செஞ்சு
வேர்வ மண்ணில் சிந்தி நிக்க
ஊர் கடந்து குடிசயில
வந்து நிக்க இரவாச்சு!
வந்துட்டுடீக இந்தாங்க என்று
வறுத்து வச்ச மொலகாயும்
தாளிச்ச பழைய சோறும்
இலையில வச்சு போனா
அந்த வீட்டு மகராசி!
அமுதம் என்ற தண்ணிர
அடைஞ்சு விட
அந்த நாளில்
அசுரங்களும் தேவங்களும்
அடிச்சு கிட்ட கத தெரியும்
இந்த சோறு இணையில்ல
எச்சி ஊற உண்ணு வச்சான்!
நாள் முழுதும் கடந்து போச்சு
விரசாக எழுந்திரிச்சு
வயக்காடு போக வேணும்,
கருப்பு சாமி காத்திடப்பா! என்று
உறங்கிப் போனான் விவசாயி!

விவசாயின் ஒருநாள் வாழ்க்கை. அற்புதம். இயல்பான நடை. பழைய சோற்றுக்கு அமிழ்தை ஒப்பிட்டு எழுதியது. அற்புதத்தின் உச்சம்.
ரசித்துப் பாராட்டியதற்கு மிக்க நன்றி ஐயா.