நிலைக்கு வந்த தேர்!
அழகான அலங்காரம்!
முகத்தில் ஒரு தெளிவு!
அகத்தில் இருந்து கிளம்பியது!
தொடக்கத்தில் ஒரு பக்கம் சாய்வு
முட்டுக் கொடுத்த
மனிதர்களால் நேரானது!
வீதிகளில் உலா !
உள்ளே புகுந்து வருவது ஒரு மேஜிக்!
காண விரும்புவோர் முன்
காட்சிக்கு வந்தது
கன்னத்தில் போட்டுக் கொண்டு
நகர்ந்தவர் சிலர்!
காலில் விழுந்து
பணிந்தவர் சிலர்!
வீட்டுக்கு வீடு மண்டகப்படி!
சில வீடுகளில் சிறந்த வரவேற்பு!
சில வீடுகளில் தரிசனம் மட்டும்!
ஊன்று கோலுடன் துணைக்கு சிலர்!
தீப்பந்தங்களுடன் வெளிச்சம் காட்ட சிலர்!
அர்ச்சனை செய்ய சிலர்!
பிடாரி போல ஆட்டம் காட்டி முன்னே வரும் கூட்டம்!
வீதி வீதியாக வளைந்து நெளிந்து
சாதி சனமெல்லாம் தூக்கி வந்து
முடிவில் நிலைக்கு வந்தது,
வாழ்க்கை எனும் அழகான தூக்குத் தேர்!
