தவழ்ந்து வரும் தென்றல்,
இடை மெலிந்த மங்கை,
கோபம் கொண்ட மனிதன்,
சப்ப மூக்கு நாய்,
நெடிதுயர்ந்த தென்னை மரம்,
திமில் கொண்ட காளை மாடு,
மூங்கில் வழி செல்லும் இசை,
சீறுகின்ற வேங்கை,
பால் தரும் பசு,
செடியில் பூத்த மலர்,
பாயும் நதி,
இருண்ட வானத்தில் ஒளிரும் நிலா,
காலைச் சூரியன்,
தவழும் குழந்தை
இப்படி ஒவ்வொன்றையும்
காணுகையில்
தோன்றியது,
இறைவன் மிகச் சிறந்த ரசிகன் என்று !
