காலை எழுந்து காப்பி குடித்து
கைபேசி தனை எடுப்பார் !
காலை வணக்கங்கள்
கட்செவியில் புலனாகும்!
அதைக் கடந்து போன பின்னர்
அருமையான பல ஸ்டேடஸ்!
பார்த்துவிடை சொல்லி விட்டு
பார்த்திடுவார் பேஸ் புக்கு !
பக்கம் புரட்டி நின்றால்
பார்க்க பல புரஃபெயில்கள்!
மதச் சண்டை, ஜாதி சண்டை
விதவிதமாய் வாக்கியங்கள்!
இடையிடையே விளம்பரங்கள்
தட்டினாலோ தடுமாற்றம்தான்!
கவனமாக ஸ்வைப் செய்தால்
ரீல்களிலே ரியல் குசும்பு!
பார்த்தது போதுமென்று
கேட்கலாம் சங்கீதமென்று
யூ டியூபை திறந்திடுவார் !
மோகன சுந்தரமும் பாரதி பாஸ்கரரும்
சாகசமாய் பேசி சிரிக்க வைத்திடுவார்!
ஒரு நிமிடம் போதும் இந்த
அல்வாவை செய்யென்று
அரை மணி வீடியோ
அழகாக அழைத்து நிற்கும்!
அல்வாவை செய்து பின்னர்
அகன்றிடலாமென்றால்
ஆக்குரோஷமாக ஒரு
யூ ட்யூபர் அக்கரையாய்
கதை சொல்வார்
ஆயிரத்தில் ஒன்றாக
அதையும் சப்ஸ்கிரைப் செய்து
அடுத்தபடிாக அந்த இன்ஸ்டாகிராம்!
கவிதை, போட்டோக்கள்,
கவருகின்ற வீடியோக்கள்,
லைக் செய்து விட்டால்தான்
நண்பருக்கு மிக மகிழ்ச்சி!
“காய்கறி என்னாச்சு?”
கிச்சனில் இருந்து குரல்!
குரோஃபரில் (இப்போது பிலிங்கிட்)
ஆன்லைன் ஆர்டர் செய்தால்
அடுத்த நொடி அழைப்பு மணி!
அப்பாடி வந்தாச்சு
அடுத்தது அமேசாந்தான்!
அடுத்த வீட்டுக்காரன் போல்
நடை அளக்கும் கடிகாரம்
தனக்கும் வேண்டுமென்று
அமேசான் பே செய்து
ஆர்டர் செய்தாச்சு!
இதற்கெல்லாம் மேலாக
இருக்குது ஒரு டுவிஸ்டு!
அதன் பெயர்தான் டுவிட்டர் !
அரசியலின் ஸ்டண்ட் மாஸ்டர்!
அடுத்த வருடம் எலெக்ஷன் என்று
ட்வீட்டையெல்லாம் புரட்டி விட்டு
அப்பாடா கொஞ்சம் ஆங்கிரி பேர்ட்
கேமை அரைமணி விளையாட்டு!
இத்தனையும் கழிந்தவுடன்
பாவம் அந்த அலைபேசி,
அதன் சார்ஜ் இறங்கி விடும்!
கொஞ்ச நேரம்தான் பார்த்தேன்
அதற்குள் இறங்கிடுது
அடுத்த மாதம் புது போனை
ஆராய்ந்து வாங்க வேண்டும்!
என்று சொல்லி வைத்திடுவார்,
அதற்குள் இரவாகி விடும்!
அலைபேசி ஒரு அசுரன்தான்
விலையில்லா நேரத்தை
வீணாக்கிக் கெடுக்கின்றான்!
கலியுக முடிவினிலே
கண்ணா நீ வருவது இருக்கட்டும்!
கைபேசி அசுரனை
உன் கையாலே அழித்துவிட
அவதாரம் செய்து விடு!
இன்றேல் அவர்க்கு கிடைத்த
நேரமெல்லாம் அதுவே
கொன்று போட்டு விடும்!

Very very nice
Thanks mam
Super