நாளைக்கு நான் போவேன் பண்டரிபுரம்
என் கூட யாரு வரேள் சொல்லுங்கோ
அந்த நேரம்
பக்தாளைப் பார்த்தால் புண்ணியத்தின் சேர்க்கை
பக்தாளைப் பார்க்கவே பண்டரினாதன் பார்வை
கல்லின் மீது நின்று காத்துக் கொண்டு இருக்கிறான்
எல்லாரும் வரட்டும் என்று ஏக்கத்தோடு இருக்கிறான்
பல்லாண்டு பாட பக்தர் கூட்டம் வருகுது
நில்லாமல் நாம கோஷம் விண்ணில் எழுகுது
காலைப் பிடித்தால் தலையில் ஏறுவான்
சாலையெங்கும் பக்தரின் கூட்டந்த்தான்
வேலையெல்லாம் விட்டு என்னுடன் வாருங்கோ
மாலை போட்டுக்கொண்டு மனம்மகிழ சேருங்கோ
