ஞானம் தர வேண்டாம் !

குருநாதரே ! எனக்கு ஞானம் தராதீர்கள்,

ஏனென்றால் ஞானம் வந்து விட்டால்

அத்வைத பாவம் சித்தித்துவிடும், அப்புறம் தங்களுக்கு நான் எப்படி சேவை செய்வது?

 

குருநாதரே ! தங்களை நான் தந்தையே தாயே என்று அழைக்க விரும்பவில்லை ஏனென்றால் அவர்கள் பிறப்பைத் தருபவர்கள், தாங்களோ நீக்குபவர் ஆயிற்றே !

 

குருநாதரே ! தாங்களே எனக்கு துணை என்று நான் கூற விரும்பவில்லை, ஏனென்றால் தாங்கள் பார்வை பட்டபோதே என் பயம் நீங்கிவிட்டதே !

 

குருநாதரே ! தங்களுடன் என்னால் பேச முடியாது ஏனென்றால் தாங்கள் வாய் மலர்ந்து உபதேசித்த போதே எனக்கு மோனம் சித்தித்து விட்டதே !

 

குருநாதரே ! எனக்கு தாங்கள் சப்தகோடி மஹா மந்திரங்களை உபதேசிக்க வேண்டாம், ஏனென்றால் இங்கே உட்கார் என்று தாங்கள் சொன்னபோதே என் சிரசில் சப்தகோடி மந்திரங்களும் உட்கார்ந்து விட்டனவே !

 

குருநாதரே ! நான் இன்று முதல் இறைவனை பூஜை செய்வதை நிறுத்தி விடப் போகிறேன், ஏனென்றால் தங்களைத் தவிர ஒரு இறைவன் இருக்கிறான் என்று எப்படி நான் நினைப்பது?

 

குருநாதரே ! நான் சாஸ்திரங்கள் அனைத்தையும் மறந்து விடப் போகிறேன், ஏனென்றால் தாங்கள் திருவடி என் சிரசில் ஏறியபின் அதில் மற்றவைக்கு எப்படி இடம் கொடுப்பது ?

 

குருநாதரே ! நான் தங்களை என் கிருஹத்துக்கு உள்ளே வாருங்கள் என்று அழைக்க முடியாது ஏனென்றால் வாசல்படியில் தங்கள் திருவடி பட்டபோதே என் கிருஹம் என்ற அகங்காரம் அகன்று விட்டதே !

96
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x