அப்பா என்று என்றும்
உட்காராமல் ஓடிக்கொண்டே இருக்கும்
ஒரு ஜீவன் அப்பா!
எந்த ஒரு பிள்ளைக்கும் தெரிவதில்லை
வாழ்க்கையில் கஷ்டமான தருணங்கள்
எவை என்று, அப்பா அருகில் இருக்கும்வரை!
தன் பிள்ளையின் எண்ண ஓட்டத்தை முகத்தை வைத்தே அளக்கும்
அறிவாளி அப்பா!
அப்பாவிற்கும் பிள்ளைக்கும் ஜனரேஷன்
கேப் என்கிறார்கள்,
ஆனால் எனக்கு தோன்றுகிறது அது
அப்பா தன் பிள்ளைக்கு கஷ்டம் தெரியக்கூடாது என்று அவர் தானே அமைத்துக்கொண்ட இடைவெளி என்று!
அப்பா அதிகாரம் செய்கிறார்தான் ஆனால் அதன் உள்ளே பொதிந்திருக்கிறது
அவரின் கடமை உணர்வு !
அப்பா தன் பெண்ணை அம்மாவாய்க் காண்கிறார்! அதில் அன்பு இருக்கிறது. தன் மகனை தானாகவே காண்கிறார்! அதனால் அதில் கண்டிப்பு இருக்கிறது!
வயது ஏறஏற பிள்ளைக்கு அப்பாவிடம் நெருக்கம் குறைகிறது, ஆனால் வயது ஏறஏறத்தான் அப்பாவிற்கு பிள்ளையின் நெருக்கம் தேவைப்படுகிறது!
அப்பா என்ற மூன்றெழுத்தில்
கடமை
கண்ணியம்
கட்டுப்பாடு என்ற
மூன்றும் இருக்கிறது!
அப்பா ! அவர் எவ்வளவு பெரியவர்!
அப்பாவாகும்போது இது ஒவ்வொரு
பிள்ளைக்கும் தெரிகிறது!

Super Appa Kavidai