வாழ்க்கையில் திருப்பு முனை இருக்கலாம் ஆனால் திருப்பு முனையாகவே வாழ்க்கை இருந்து விட்டால் என்ன செய்வது?
பொறுமைக்கும் ஒரு அளவுண்டு என்பார்கள், அளவிருந்தால் அதற்கு பொறுமை என்று எப்படி பெயர்?
நாளைக்கு என்பது இல்லை என்பதற்கு அடையாளம் என்கிறார்கள். இன்று என்பதும் நேற்றைய நாளை தானே?
மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்பார்கள், இப்போதோ பணமிருந்த்தால்தான் மார்க்கம் உண்டோ?
பிடிவாதம் பிடிக்கக் கூடாது என்பாரகள், எவரெஸ்ட் ஏறியவர்க்கு அந்த பிடிவாதம் தேவைதான் இல்லையா?
மணமக்கள் இருவருக்கும் பிடித்து விடுகிறது ஒரே பார்வையில், இடையில் ஜோதிடர்களுக்கு மட்டும் கிரகங்களின் பார்வை ஏன் பிடிக்காமல் போய் விடுகிறது?
