இவள் வாக்கின் அதி தேவதை!
பிரம்மா கூட படைப்பின் படிப்பை
இவளிடம்தான் கற்க வேண்டும்!
இவளின் கால் சலங்கை ஒலி
சிருங்கேரியின் தொடக்க ஒலி!
இரண்டான துங்க பத்ரா நதிக் கரையில்தான்
இரண்டில்லா அத்வைதம்
கரை புரண்டு ஓடுகிறது !
தங்கம் போல் ஜொலிக்கிறது
இவள் மேனி!
பொங்கும் அறிவு அது இவள் தந்த
கேணி!
கத்திய பத்தியங்கள்
சத்தியமாய் நிலைக்கும்
சாரதையின் சங்கமத்தில்!
செந்தமிழும் வடநூலும்
இந்த நொடி நெஞ்சிலுறும்
சிந்தனையில் சீர்மை அது
சந்ததமும் வந்துதிக்கும்!
இவள் அருகில் வசிக்கின்ற
குரு பீடம் இவள் பீடம்!
அத்வைத சித்தாந்தம்
அகிலமெலாம் பரைசாற்றும் !
இவள் அருள் இருந்தால்
என்னைப்போல்
மந்தக்கவி கூட
சந்தக் கவி எழுதும் !
வேதாந்தக் கவி என்று
வியனுலகம் அழைத்து நிற்கும்!
21.06.2022
