பேசுவதே நமக்குத் தொழில் விட்டலன் புகழை என்றும்
எத்தனையோ பாஷை எனக்குத் தெரியும் என்பாயோ
சித்த நேரம் விட்டலா என்று சொன்னால் போதாதோ
பாகவத கோஷ்டி வாசலில் வருகுது
சாவகாசமாக தூக்கம் உனக்கேன் வருகுது
தேவையில்லா பேச்சு தினம் தினம் ஏன் நடக்குது
நாவை அவன் நாமத்தில் நேராக நிறுத்திடு
வருவான் வந்தமர்வான்
அருளை நன்றாய் வழங்குவான்
பொருள் தேடி ஏன் போக்க வேண்டும் பொழுது
உரிமையாய் உள்ளத்தில் அவன் தாள் வணங்கு
