காலையில் எழுந்து விட்டேன் காதில் பூபாளம்
குடிக்க வேண்டும் அதன் பின்னே அதுவே காப்பி
சுத்த சாவேரியாய் சுத்தமான காவேரியில்
புன்னாகவராளியாய் போட்டேன் ஒரு குளியல்
இராமனுக்கு பிரியமாய் பக்தியாய் பூஜை
ஆபரணம் அணிவிப்பு சங்கராபரணத்தில்
பூஜை முடிக்கையில் சமையல் அறையிலிலே சாமா ன் தாளிப்பு
ஆஹிரியாய் வயிற்றுக்குள்ளே அகோர பசி
ஆகாரம் தந்திடுவாள் ஆனந்தமாக பைரவி
தோத்திரங்கள் படிப்பதிலே ஒரு மோஹனம்
மத்தியானம் ஆனவுடன் மத்யமாவதியில் ஒரு பாடல்
வித்தியாசமில்லாமல் வாண்டுகளுடன் நாட்டையில் அரட்டை
மாலை பிறந்தவுடன் சந்தியா தேவகாந்தாரியில்
காம்போதியுடன் தின்பண்டம் கார சாரமாய்
சாரங்கணின் பஜனை அழகான சாவேரியில்
கச்சேரி கேட்கலாம் வானொலியில் ஹரிகாம்போதி
இருள் கவியும் மாலை நேரம் இதமான தோடி
பொருள் பதிந்த பாராயணங்கள் பங்க்தியாய் பந்துவராளி
மாலைத் திண்பண்டம் மயக்கும் மாண்டு
இரவானால் போதும் எங்கேயும் கல்யாணி
இரவு டின்னருக்கு ஏராளமாய் பைரவி
உறங்கப் போகுமுன் உயர்வான பெஹாக்
கண்ணுறங்க வைத்திடும் கோர்வையாக நீலாம்பரி
ஆழ்ந்த உறக்கத்தில் அநேகமாய் ஆரபி
இதுவே சங்கீதம் வாழ்வினிலே இது போதும்
எப்போதும் கதனகுதூகலம்

Jeysakthi. Blessings. Excellent
நன்றி நமஸ்காரம்
அருமை! என்ன சமையலோ திரையிசைப் பாடலை ஞாபகபடுத்துகிறது = https://www.tamil2lyrics.com/lyrics/enna-samayaloo-song-lyrics/
சமையல் மட்டுமல்ல வாழ்வு முழுவதும் சங்கீதம்தானே! நன்றி