அலைந்து கொண்டே இருக்கும் உன் விழிகள் !
அதை காணும் என் விழிகள் துளி கூட அசைவதில்லை !
அசைந்து கொண்டே இருக்கும் உன் காதணிகள் !
அதை கேட்கும் என் காதுகள் வேறெதையும் கேட்கவில்லை !
உன் மேனியின் வாசத்தில்
என் மூக்கு வேறெதையும்
முகர்வதில்லை!
உன் பேச்சில் இன்பம் காணும்
உதடுகள்
வேறொன்றையும்
பேசுவதில்லை!
உன் ஸ்பரிசத்தில்
என் உடலின் இயக்கம்
சற்று நின்றுதான்
விடுகிறது !
உன் அழகில்,
அலைந்து கொண்டே இருக்கும்
என் மனம் கூட
அசையாமல் தவம் இருக்கிறது!
இதை காதல் மயக்கம் என்று
சொல்பவர்கள் சொல்லட்டும்!
ஆனால் இப்படி ஐம்புலன் அடக்கம்
உன்னால் சித்தித்து
விடுகிறது,
எந்த சாதனையும் இன்றி !

ஸ்பரிசத்தை அடுத்து ஐம்புலன்களும் தம்மை பறக்கும். விரக தாபம் பொல்லாத உணர்வு. கவிதை நன்று.
மறக்கும்