உச்சிஷ்ட மகிமை
ஒருநாள் காலையில் காவேரியில் ஸ்னானம் செய்யும் பொழுது ஒரு எச்சில் மாவிலை காற்றில் மிதந்து வர, அதை எடுத்து அக்காள் பல் விளக்கினாள், அதைக் கண்டு அங்கு ஸ்னானம் செய்து கொண்டிருந்த பெண்மணிகள்
“எச்சில் இலையை எடுத்து விளக்குகிராள் பாருங்கள் ”
“இவளுக்கு என்ன ஆயிற்று என்று தெரியவில்லை ”
“கலி முத்திடுத்துன்னுதான் சொல்லணும் ”
இதை எதையும் காதில் வாங்காமல் ஆவுடை எந்தவித விகாரமும் இன்றி இருந்தாள்.
“அம்மா எப்படி இருக்கிறாய்? எச்சில் இலையை எடுத்து உபயோகிக்க எப்படி பக்குவம் வந்தது?”
குரல் கேட்டு திரும்பினாள் ஆவுடை. அங்கே அவளுடைய குருநாதர் ஶ்ரீ தர ஐயாவாள் நின்று கொண்டிருந்தார்கள்.
அவரை வணங்கிவிட்டு
“நமஸ்காரம்!
மகாத்மாக்கள் உபயோகித்த உச்சிஷ்டம் நமது வல்வினையைப் போக்கி நல் எண்ணங்களை உண்டாக்கும் என்பது பெரியோர் வாக்கில் கேட்டிருக்கிறேன். ”
இதைக் கேட்ட ஐயாவாள்
“ஆமாம் அம்மா நீ சொல்வது சரிதான். மேலும் உனக்கு மிகுந்த உள்ளப் பக்குவம் ஏற்பட்டிருக்கிறது.”
இதைக் கூறிய அய்யவாள் அவள் நாக்கில் பீஜாக்ஷரத்தை தர்ப்பையினால் எழுதி அவளை ஆசீர்வதித்து. ·
உனக்கு ஜீவன் முக்தி நிலை ஏற்பட்டுவிட்டது. இனி உனக்கு ஜனன மரணமில்லை. நீ எங்கிருந்தாலும் உன்னை கர்மபந்தம் அணுகாது, உன் சொந்த ஊருக்கே சென்றிரு”
என்று அனுக்ரகித்தார்கள்.
ஒருநாள் ஆற்று மணலில் உட்கார்ந்து ஆவுடை அக்காள் சிவ பூஜை செய்து கொண்டிருந்தாள். மற்றும் பெண்மணிகள் கூட அமர்ந்திருந்தார்கள். திடீரென்று ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. இதை எதுவும் அறியாமல் ஆவுடை அக்காளோ மிகுந்த தியானத்தோடு பூஜையில் ஈடுபற்றிந்தாள். கூட அமர்ந்திருந்தவர்களில் ஐந்தாறு பேர்கள்
“ஆற்றில் வெள்ளம் வந்து விட்டது. ஓடுங்கள்”
என்று கூறியவாறே ஓடி விட்டனர். சிலர் சிவனுக்கு அபிஷேகம் ஆகிக்கொண்டிருக்கிறது என்று தரிசித்தவாறே அமர்ந்திருந்தனர். ஆனால் வெள்ளம் மிகவும் அதிகரித்துக் கொண்டே வந்தது. அவர்களும் அலறிக்கொண்டு ஓடி விட்டனர். இப்படி அனைவரும் சென்று விட ஆவுடை அக்காள் மாத்திரம் வெள்ளம் வருவது, அனைவரும் எழுத்து சென்றது எதுவும் அறியாமல் சிவதியானத்தில் மூழ்கி பூஜை செய்து கொண்டிருந்தாள்.
அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
பயணம் தொடரும்…..
