விடிவதற்குள் வந்து விடு !

கூடலை விட ஊடல் சிறந்தது என்று தோன்றுகிறது ஏனென்றால்

கூடலில் கூட இருக்கும்போது இன்பம்

ஊடலிலோ எங்கிருந்தாலும் உன் நினைவு !

 

என்னை மறந்து விடு என்று

நீ கோபத்தில் கூறும்போதுதான்

உன் நினைவுகளின் தாக்கம்

அதிகமாகின்றது !

 

என்னைப் பார்க்காதே

என்று நீ கூறுகையில்

கோபத்தில் உன் முகம்

சிவந்து விடுகிறது !

அதன் ஒளியில்

என் கண்கள்

கூசித்தான் போகிறது,

பின் எப்படிப் பார்ப்பது?

 

நீ வருவாய் என்று

காத்திருந்தேன்

காணாமல் போனது

நீ இல்லை

என் மனம்தான் !

 

நாளை நீ வருவாய்

என்று இரவு முழுதும்

விழித்திருந்தேன்

என்னோடு கூட

நிலவும்தான்,

அதற்குத்தான்

தெரியும் எத்தனை

காதலர்கள்

விழித்திருந்தார்கள் என!

 

கூடலுக்குத்தான்

வரவில்லை

ஊடலுக்காகவாவது

வருவாயா?

 

தேன் கசப்பு என்பதும்

பால் துவர்ப்பு என்பதும்

காதலியைக்

காணாமல் தவிப்பவர்க்குத்தான்

தெரியும் !

 

நாளை விடிவதற்குள்

வந்து விடு

இல்லாவிட்டால்

எனக்கு எப்போதுமே

இருள்தான் !

100
admin

admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments
error: தயவு செய்து வேண்டாமே!!
0
Would love your thoughts, please comment.x
()
x