நான் ஒரு பைத்தியம்
விட்டலன் மீது பேராசை கொண்ட
நான் ஒரு பைத்தியம் (நா)
(VOICE : SMT. SEETHA, CHENNAI)
குடும்பம் குட்டிகள்
எதுவும் தெரியாது
அடுப்படிக்கோ எப்போதும்
போனது கிடையாது (நா)
வீட்டுக்குள்ளே நடக்கும்
விஷயம் ஏதும் தெரியாது
மாட்டிலே பால் வருமோ
மனசுக்கு ஏதும் புரியாது (நா)
பணமும் காசும் பகட்டும்
வீசைக்கும் கிடையாது
இனதுக்கு சொந்தம்
யாரென்று தெரியாது (நா)
நேரே வந்து நின்னாலும்
தெரியாது
கோர சம்சாரம் கொடுமையும்
அறியாது (நா)
பூரா மனசும் புண்டரீகன்
வசம் ஆனது
சேராமல் எதிலும்
சொக்கி நிற்குது (நா)
விட்டலா விட்டலா என்று
புலம்பும் பயித்தியம்
அட்டகாசமாக அவனை
என்றும் ஜபித்திடும் (நா)
