மனமே மூழ்கி விடு என்றும் ஜெபம் தன்னில்
இக்கணமே இற்று விடும் வினைகள் உன்னில் (ம)
கணபதி ஜெபம் கார்ய சித்திக்கு
பாலா மந்திரம் பக்குவ மனத்திற்கு
பதினைந்து அக்ஷரம் இகபர சுகமாம்
இருபத்தி எட்டால் ஏகுவோம் மோக்ஷம்
(ம)
பத்து ஜெபம் தொடங்கினால் பல நூறு ஆகும்
முத்து எடுப்பது போல் மூழ்கி விட லாகும்
எத்தனை ஜபித்தாலும் இன்னும் அதிகமாகும்
பித்தனைப் போல எக்கணமும் எண்ணும்
(ம)
என்ன வேண்டுமானாலும் எதிரே தோன்றும்
சன்னமாக ஜெபிக்க ஜகமது மறையும்
பின்னமான ஜீவன் அபின்னமாய் ஆகும்
என்ன நடந்தாலும் ஏகாந்தம் லபிக்கும் (ம)
