இந்த நொடியே இனிமை எல்லாரும் வாழுங்கள்
எந்தக் கவலையும் வேண்டாம் தூரத் தள்ளுங்கள் (இந்த)
நேற்றைக்கு திரும்ப வாராது
நாளைக்கு நாம் இருப்போமா தெரியாது (இந்த)
அரை வயிற்றுக்கு கஞ்சி அற்புதமாய் இருக்குது
கரை போட்ட வேட்டி கச்சிதமாய் பொருந்துது
நரை முடி இருந்தாலும் நீளமாய் இருக்குது
தரையினில் படுத்தாலும் தூக்கம்
தானாய் வருகுது (இந்த)
அம்பிகை பாதமது அற்புதமாய்த் தெரியுது
கும்பிட வேண்டும் என்றால் கை இரண்டும் இருக்குது
நம்பிக்கை வைத்தால் போதும் நல்ல மனம் கூடுது
இப்போதே சொல்லி விடு ஏகாந்தம் இனிக்குது (இந்த)
பிள்ளைக் குட்டியெல்லாம் பக்கத்தில் இருக்குது
அள்ள அள்ளக் குறையாமல் அன்பது சுரக்குது
கள்ளமில்லாமல் பழக சொந்தம் கூடத்தில் இருக்குது
துள்ளி துள்ளி மனம் தூளிக் குழந்தை போல் ஆடுது (இந்த)

நம்பிக்கை தரும் வரிகள். பாராட்டுக்கள்
ரசித்தமைக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி ஐயா
மிக அருமை !
நன்றி சித்தப்பா