நேராய் சென்றால் நன்மை உண்டு என்று
நினைத்து யானைபோல் செல்கின்றனர் மக்கள்.
ஆனால் வாழ்வின் இடையே
துன்பங்களைக் கண்டு இரண்டடி பின் வைத்து ஓரடி நகர நேர்கிறது குதிரையாய்.
எங்கும் எப்போதும் எவ்வகையிலும் செல்லலாம் ராணி போல் என்றால்
எதிரும் புதிருமாக குறுக்கே வரும் சதுரங்க மந்திரிகள் போல் கருப்பும் வெளுப்புமான கட்டங்களில் சில மனிதர்களை எதிர் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.
இவ்வளவு இருந்தும், கடைசி காலத்தில்
நம்மைக் காப்பாற்றுவார்கள் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்
தன் சிப்பாய்ப் பிள்ளைகளை நினைத்து!
வாழ்க்கைச் சதுரங்கத்தில் வெற்றியும் தோல்வியும் சகஜம் என்றாலும்
வெட்டுப்படுவதென்னமோ அப்பாவி மக்கள்தான். இருந்தாலும் வேந்தனை விட்டுக் கொடுப்பதில்லை பல மக்கள் காய்கள்.
ராணி போல் சுதந்திரமாக நடமாடும் எங்கள் நாட்டுப் பெண்களை நினைத்து பெருமையாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் இங்கும் அங்குமாக சில பாவிப் பான்கள் செல்ல விடாமல் தொல்லை செய்வது என்னமோ உண்மைதான்.
அதனால் நம்பிக்கை என்ற யானை கூட சில சமயங்களில் பின் வாங்க நேரிடுகிறது.
மக்கள் தான் ராஜாக்கள் என்கிறது சட்டம். என்றாலும் ஓரடி வைத்தாலே மூச்சு வாங்கும் சதுரங்க ராஜாக்கள் போலதான் எங்கள் வாழ்வு.
எது எப்படி இருந்தாலும் நாங்கள் ராஜாக்கள்தான். எங்கள் இளைய சமுதாயம் என்ற படை பலம் நமக்கு இருக்கிறது, எனவே வெற்றி நிச்சயம். தொடர்ந்து முன்னேற்றப் பாதையில் செல்வோம் வாருங்கள்.

சூப்பர். நல்ல விளக்கம் .
நன்றி மன்னி