போதும் ! போதும் !! என் பக்கம் வாருங்கள்
பண்டரி நாதன் அழைக்கிறான் பாருங்கள் (போ)
சக்கரைப் பொங்கல் சாதம் சாப்பிட்டதும்
விக்கல் வரும் வரை உண்டது முப்போதும் (போ)
கவலையும் பொறுப்பிலும் காலம் கழித்ததும்
தவமென்று தினம் தினம் தூங்கி எழுந்ததும்
துவைத்த துணிகளை காய்ந்திடப் போட்டதும்
அவையோர் மகிழ்ந்திட ஆயிரம் மொழிந்ததும் (போ)
ஓய்வு பெற்றாலும் ஓய்ந்திடாது கர்மங்கள்ஆய்வு செய்திட ஆயிரம் உண்டு விஷயங்கள்காய்ந்து போன காராம்பசு போலேஓய்ந்து போய்விடும் ஏதும் நிலையில்லை (போ)
