ஆர்யா சதகம் – முதல் ஸ்லோகம்
காரணபரசித்ரூபா காஞ்சீபுரஸீம்னி காமபீடகதா |
காசன விஹரதி கருணா காஶ்மீரஸ்தபக கோமலாங்கலதா ||
(எழுத்து: கவியோகி நாகசுந்தரம்
குரல் ; ஶ்ரீமதி அபர்ணா)
ராகம்: சாமா
பல்லவி
காஞ்சியில் விளங்குகிறாள் காமாக்ஷி
காரணம் அவளேதான் நல் சாக்ஷி (கா)
அனுபல்லவி
காம பீடமே காஞ்சி ஸ்தலம்
வாமத்தில் உறையும் ஓர் சலனம் (கா)
சரணம்
எல்லையில் அடங்காத அழகு வெள்ளம் (காஞ்சி)
எல்லைக்குள் விளங்குகின்ற அன்பு உள்ளம்
குங்குமப்பூவின் குழம்பு போல் மேனி
எங்கும் சிவந்திருக்கும் ஏகாந்த ராணி (கா)

பாட்டும் பாடிய விதமும் மிக மிக அருமை
மிக்க நன்றி