ஆர்யா சதகம் – ஸ்லோகம் 48
ஶிவ ஶிவ பஶ்யந்தி ஸமம் ஸ்ரீகாமாக்ஷீகடாக்ஷிதா: புருஷா: ।
விபினம் ப⁴வனமமித்ரம் மித்ரம்
லோஷ்டம் ச யுவதிபி³ம்போஷ்டம்
ராகம் : சிந்துபைரவி
குரல் : ஸ்ரீமதி அபர்ணா, மும்பை
பல்லவி
சமமாய் பார்க்கிறார் சாதுக்கள்
உலகில் அனைத்தும் ஒன்று என்பார்கள்
அனு பல்லவி
காமாக்ஷி அவளின் கடைக்கண் பெற்றால்
சாமான்யரும் சாதுக்கள் ஆவார்
சரணம்
காடும் வீடும் அவருக்கு ஒன்றே
சேரும் நண்பரும் பகைவரும் ஒன்றே
யுவதியின் உதடும் ஒட்டாஞ்சில்லும்
சிவ சிவ ! அவருக்கு என்றும் ஒன்றே
