நைல் நதிக்கரையினிலே……
மறக்க முடியாத கற்பனை கலந்த வரலாற்று குறுங்காவியம்.
(இது வரலாற்றுக்கு குறிப்புகளை வைத்து எழுதப்பட்ட கற்பனை குறுங்காவியம். இதில் இடம்பெறும் பெயர்கள் இடங்கள் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே யாரையும் குறிப்பிடுவன அல்ல.)
அத்யாயம் 1
சமையல் அறை சம்பவம்.
நைல் நதியின் கரை ஓரம்.
அவர் உட்கார்ந்த இடத்திலிருந்து அந்த மாறுபட்ட நதியின் சலசலப்பு அவருக்குள் மிகப் பழைய விஷயங்களை நினைவூட்டின. அவர் தந்தையாரின் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தந்தையார் கூறியது அவர் நினைவுக்கு வந்தது.
அவர் என்று குறிப்பிட்டவர் பெயர் இஸ்மத். இஸ்மத் என்றால் பாதுகாக்கபட்டது என்று பொருள். அவர் பாதுகாக்கப் பட்டவர்தான். அவர் முன்னோர்கள் வாழ்வில் நடந்த சம்பவங்கள் ?
கேள்விக்குறிதான் பதில்.
எதிரே நைல் நதி.
அவர் எண்ணங்கள் 1960 களின் காலகட்டங்களுக்கு சென்றது. நாமும் அவருடன் சேர்ந்து பயணிப்போம்.
இன்று தொழில் நுட்பம் மிகவும் முன்னேறி உள்ளது. கணிணி இன்றி எந்த வேலையும் நடப்பதில்லை. இதற்கு முன் விதை 1960களில் போடப்பட்டது. அதே போன்று இன்றைய தீவிர வாதத்திற்கும் கொடூரமான கொலைகளுக்கும் அப்போதுத்தான் விதை போடப்பட்டது எனலாம். அந்த விதத்தில் அமைதியாக ஓடி கொண்டிருக்கும் இந்த நைல் நதிக்கு பெரும் பங்கு உண்டு. லக்ஷகணக்கான மனித உயிர்கள் இதிலே மீன்களாக மிதந்த வரலாறு இன்றைய தலைமுறை ஒருவாறு அறிந்ததுதான்.
அப்படி அறிந்தவர்களுக்கும் அந்த வரலாற்றை அறியாதவர்களுக்கும் இந்த கதை ஓரளவு பழையதை நினைவூட்டும். மனிதர்களுக்குள் இவ்வாறு கூட பலர் இருந்திருக்கிறார்களா என்று ஆச்சர்யமூட்டும்.
இந்த நதியை பார்க்கும்போதெல்லாம் இஸ்மத்துக்கு தந்தையார் நினைவுதான் வரும். தந்தையாரான முஷீர் ஒரு மிகசிறந்த சமையல்காரர் என்பதுதான் பலருக்கு தெரியும். ஆனால் அவருக்கு பின் இருந்த பல விஷயங்கள் பலரும் அறியாத ஒன்று.
இஸ்மத்தின் எண்ணக் குதிரை பின்னோக்கி சென்றது. அந்தக் குதிரையில் நாமும் சேர்ந்து பயணிப்போம்.
ராணுவ கேம்ப், புட்டேன்ம்பேயில் (ஊரின் பெயர்) உள்ள ராணுவ சமையல் அறை சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.
ராணுவ அதிகாரிகளின் காலை உணவுக்கு சூப்பு கண்டிப்பாக வழங்கப்படவேண்டும் என்பது உத்தரவு. இரண்டு நாளாக கால்களில் முஷீருக்கு வலி. அதையும் பொருட்படுத்தாமல் முஷீர் சூப்பு தயாரிப்பில் மும்முரம்மாக இயங்கிகொண்டிருந்தார். தனது நம்பிக்கைக்குரியவர் அமீன் பக்கத்தில் இருந்தார்.
“முஷீர் ! நான் உதவிக்கு வரட்டுமா” என்றார்.
“இல்லை அமீன் ! நான் பார்த்துகொள்கிறேன். நீங்கள் உங்கள் வேலையை செய்யுங்கள்”
என்று பதில் கூறினார் முஷீர்.
அமீன் பெயருக்கேற்றது போல் இவரது உதவியாளர்தான். ஆனாலும் அவரவர்கென்று வேலை இருக்கிறதல்லவா. அதனால் முஷீர் பெரும்பாலும் அவரை அதிகம் வேலை வாங்குவதில்லை. எப்போதும் முஷீர்தான் சமைத்தவற்றை பரிமாறுவார். ஆனால் இன்று கால் வலி உயிர் போயிற்று. வேறு வழி இல்லை. அமீனைத்தான் பரிமாற சொல்லவேண்டும்.
காலை உணவிற்கான வேலைகள் ஒருவாறு முடிந்து விட்டது.
“அமீன் இந்த உணவு வகைகளை எல்லாம் பரிமாற ஏற்ற வகையில் சரி செய்யுங்கள்”
என்று கூறிய முஷீர் தன் காலை பிடித்தவாறு சற்று உட்கார்ந்தார். அமீன் மிகவும் சுறுசுறுப்பானவன்.
“நான் சென்று பரிமாறுகிறேன் ஐயா ! நீங்கள் சற்று ஓய்வெடுங்கள்” என்றான் அமீன்;
அன்று அந்த இராணுவ சமையல் அறையில் அந்த சம்பவம் நிகழாமல் இருந்திருந்தால் ?
நைல் நதியின் சலசலப்பில் இஸ்மத் தன் நீண்ட பழைய நினைவிலிருந்து மீண்டார். தந்தையார் தன் வாழ்வில் பட்ட கஷ்டங்களும் இன்று தான் சுகமாக இருப்பதையும் எண்ணி அந்த நைல் நதியை பார்த்தார்.
அது காலங்களை விழுங்கி தன் பாட்டுக்கு ஓடிகொண்டிருந்தது.
நைல்’ என்ற சொல்லுக்கு எகிப்திய மொழியில் ஆறு என்று பெயர். நைல் நதியின் தோற்றுவாய் எது என்பதில் இன்றளவும் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. விக்டோரியா ஏரியே இதன் முக்கியத் தோற்றுவாய் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த ஏரி உருவாக பல்வேறு சிற்றாறுகள் துணை புரிகின்றன. அவற்றுள் முக்கியமானது “காகேரோ’ என்னும் ஆறு ஆகும். இது டான்சானியாவில் “புகோபா’ என்னும் இடத்தில உற்பத்தியாகிறது.
இது தவிர “ருவியோரான்சா’…,”நியாமராங்கோ’ போன்ற பல சிற்றாறுகளும் விக்டோரியா ஏரிக்கு நீர் வழங்கும் ஆதாரங்களாக விளங்குகின்றன. இந்த ஆறுகள் அனைத்தும் ஒன்று கூடி “ருசுமோ’ என்ற பெயரில் அருவியாக விழுகின்றன. நைல் நதியின் தோற்றுவாய் என்று நம்பப்படும் இடத்தை “கிஷ் அபே’ என்று அழைக்கிறார்கள்.
எத்தியோப்பியாவில் பெய்யும் கனமழையால் நைல் நதியில் பெருக்கு ஏற்படுகிறது. ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெள்ளப் பெருக்கு அதிகமாகி நீர் மட்டம் உயரும். எத்தியோப்பியாவிலிருந்து நீர் மட்டும் அடித்து வராமல் வளமான கருப்பு நிற வண்டல் மண்ணையும் நைல் நதி அடித்து வருகிறது. அக்டோபர் மாதம் வெள்ளம் முழுவதும் வடிந்த பிறகு விவசாயம் செய்யத் தொடங்குகிறார்கள். மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் அறுவடை நடைபெறும்.
நைல் நதி “வெள்ளை நைல்’ மற்றும் “நீல நைல்’ என இரு கிளைகளைக் கொண்டுள்ளது. மத்திய ஆப்பிரிக்காவின் “விக்டோரியா ஏரி’ யில் இருந்து வெள்ளை நைலும், (இது தான்சானியா, உகாண்டா, தெற்கு சூடான் வழியாகப் பாய்கிறது.) எத்தியோப்பியாவில் உள்ள “டானா ஏரி’ யில் இருந்து நீல நைலும் (இது சூடானின் தென் கிழக்கு நோக்கிப் பாய்கிறது.) உருவாகின்றன. இவ்விரு ஆறுகளும், சூடானின் தலைநகர் “கார்டூம்’ இல் ஒன்று சேர்ந்து நைல் நதியாகப் பெருக்கெடுத்து ஓடுகின்றது.
எகிப்து, சூடான் ஆகிய இரு நாடுகளுக்கும் முக்கிய ஆதாரமாக விளங்குவது நைல் நதியே ஆகும். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய எகிப்தின் முக்கிய இடங்கள் யாவும் நைல் நதியின் கரையை ஒட்டியே அமைந்திருந்தன.
நைல் நதி பாலைவன எகிப்து நாட்டின் ஜீவ நதி. எகிப்தின் பழைய பாடல் ஒன்று சொல்கிறது.
“மண்ணின் ஆனந்த ஊற்றாம் நைல் நதி போற்றி
எகிப்தைச் செழிப்பாக்க வந்தாய் நீ
உணவுகள் தருவது நீ, வாரி வழங்கும் வள்ளல் நீ
நல்லவை எல்லாம் படைப்பது நீ
எகிப்திய இரு நிலப் பாகங்களின் தலைமை நீ
எங்கள் களஞ்சியங்களை நிறைப்பது நீ
ஏழைகளுக்கு வளம் தருவது நீ.”
ஆனால் இன்று இத்தகைய வளங்களை வாரி வழங்கும் நதி அன்றோ ?
(தொடரும்)

Very interesting sundar. Eagerly awaiting upcoming episodes
Super.