எல்லாம் மாறிப் போச்சு
மாறிப் போச்சு எல்லாமே உலகத்துல
வேற மாறி தெரியுதப்பா காணயில
துன்பத்துல வாடயில தூக்கம் போச்சு ஆனா இப்போ
துன்பத்துல இருந்தாலும் துக்கம் போச்சு
இன்பத்துல மகிழ்ந்ததெல்லாம் ஒரு காலத்துல
ஆனா இப்போ
இன்பத்துல இருந்தாலும் மனம்ஈடு பாடு இல்ல
கைய வலிச்சாக்க கதறி அழுதேங்க
ஆனா இப்போ
கை காலு இழுத்தாலும் கவல இல்ல
மணம் வீசும் பூக்களிலே மனம் லையிப்பேங்க
ஆனா இப்போ
நல்ல குணந்தான் மலர் என்று கண்டு கொண்டேங்க
அத்வைதம் பாடமாக நூல் படிச்சேங்க
ஆனா இப்போ
பத்தாகத் தெரிந்தாலும் பாவன ஒண்ணுங்க
ருசியாக அதிரசத்த தின்னேங்க
ஆனா இப்போ
பசிக்குத்தான் பழைய சாதம் போருமுங்க
மாறிப் போன காரணத்த கேளுங்க
ஊறிப் போகும் உள்ளுக்குள்ள ஞானமுங்க
சத்குருவின் சரணத்த புடிச்சேங்க
சுத்தமாக அறியாமை போச்சுதுங்க
வேதம் புராணம் கூறுதுங்க அந்த குரு
நாதருதான் மோட்சத்தின் வாசலுங்க
காதருகே அன்னிக்கி சொன்னாருங்க
பேதமில்ல பரம்பொருள் நீ என்னாருங்க
அன்னிக்கி மாறினது என் சிந்தனைங்க
என்னிக்கும் மாறாது இந்த கொள்கையிங்க

எளிமை இனிமையான கவிதையுங்க – ஆனா
எடுத்துரைத்த கருத்தோ ஆழமுங்க
மிக்க நன்றிங்க