துர்க்கைத் துதி எழுநூறு ! (1-10)

ஶ்ரீ குருப்யோ நம:

மகாபாரதத்தின் நடுநாயகமாக எழுநூறு சுலோகங்களடங்கிய பகவத்கீதை அமைந்திருப்பது போல் மார்க்கண்டேய புராணத்தில் எழுநூறு மந்திரவடிவான தேவீ மஹாத்மியம் அமைந்திருக்கிறது. இது சண்டிகா தேவியின் பெருமையைக் கூறுவதால் சண்டீ என்றும், எழுநூறு மந்திரங்களடங்கியதால் ஸப்தசதீ என்றும் கூறப்படும். ஆஸ்திகர்களால் இது இமயம் முதல் கன்யாகுமரி வரை பாரததேசம் முழுதும் பாராயணத்திற்கும் ஜபத்திற்கும் ஹோமத்திற்கும் உலக ஷேமத்திற்காகவும் அரிஷ்ட நிவிருத்திக்காகவும் தொன்றுதொட்டுப் பெரிதும் கையாளப்பட்டு வருகிறது.

இதற்கு உரைகள் பல உள. இவற்றுள் சில சாந்தனவீ, புஷ்பாஞ்ஜலி, ராமாச்ரமீ, நாகேசீ, குப்தவதீ, தம்சோத்தாரம், துர்க்காப்ரதீபம் என்பனவாம். காத்யாயனீதந்த்ரம், கடகதந்த்ரம், க்ரோடதந்த்ரம், மேருதந்த்ரம், மரீசிகல்பம், ருத்ரயாமளம், சிதம்பர ரஹஸ்யம் முதலிய ஆகம நூல்களிலும் பல்வேறு புராணங்களிலும் தேவீ மஹாத்மியத்தின் பெருமை விளக்கிக் கூறப்படுகிறது.

ஒரு புதிய முயற்சியாக இந்த சப்த சதியை எளிய கவிதை வடிவில் தர முயற்சித்துள்ளேன். உணர்ந்து சிறக்க உத்தமி அருளட்டும்.

துர்க்கைத் துதி எழுநூறு !

முதல் அத்தியாயம் 1 to 10

மதுகைடப வதம்

ஓம் சண்டிகைக்கு என்றும் வணக்கம்!
(ஒம் – ஐம்)
ஸாவர்ணிஃ ஸூர்யதனயோ யோமனுஃ கத்யதே‌உஷ்டமஃ|
னிஶாமய ததுத்பத்திம் விஸ்தராத்கததோ மம ||2||
2. பகலவன் புதல்வன் எவனோ,
பத்தில் இரண்டு கழிந்த எண்ணில்
உத்தம அரசன் எவனோ,
ஸாவர்ணி என்பான் சரிதம்
ஆவலுடன் சொல்லப் புகுந்தார், நவயுகத்தின் மார்க்கண்டேயர் !
மஹாமாயானுபாவேன யதா மன்வன்தராதிபஃ
ஸ பபூவ மஹாபாகஃ ஸாவர்ணிஸ்தனயோ ரவேஃ ||3||
3. மாய்கைக்கே மாய்கை செய்யும்
மகத்தான தெய்வம் எதுவோ
ஊழிற்கே ஊழி செய்யும்
உத்தம சக்தி எதுவோ (அது)
பகலவன் புதல்வன் தன்னை அதிபதியாய் ஆக்கிய சரிதம்!
ஸ்வாரோசிஷே‌உன்தரே பூர்வம் சைத்ரவம்ஶஸமுத்பவஃ|
ஸுரதோ னாம ராஜா‌உபூத் ஸமஸ்தே க்ஷிதிமண்டலே ||4||
4. ஆதிக்கும் ஆதி காலம்
சைத்திர வம்சம் தன்னில்
உதித்தவன் சுரதன் என்பான்
அதிகாரம் செய்தால் போதும்
கதித்திடும் காசினி முழுதும், அதிசயம் அவனின் சரிதம்!
தஸ்ய பாலயதஃ ஸம்யக் ப்ரஜாஃ புத்ரானிவௌரஸான்|
பபூவுஃ ஶத்ரவோ பூபாஃ கோலாவித்வம்ஸினஸ்ததா ||5||
5. மக்களை மகவாய்ப் பார்ப்பான்,
அக்கறை மிகவும் கொள்வான்!
எக்கணமும் எதுவும் நடக்கும்!
உக்கிரம் மிகவும் கொண்ட
கோலாவித்வம்சிக் கூட்டம் நாலா பக்கம் வளைத்தது !
தஸ்ய தைரபவத்யுத்தம் அதிப்ரபலதண்டினஃ|
ன்யூனைரபி ஸ தைர்யுத்தே கோலாவித்வம்ஸிபிர்ஜிதஃ ||6||
6. பலமதிகம் என்றால் கூட
பகைவரை வெல்லுதல் கடினம் !
கலகம் மிகச் செய்தது காலம்
பலகாலம் பாரில் ஆண்டவன்,
கோலா வித்து வம்சி இடத்தில் ஆளுகை தன்னை இழந்தான்!
ததஃ ஸ்வபுரமாயாதோ னிஜதேஶாதிபோ‌உபவத்|
ஆக்ரான்தஃ ஸ மஹாபாகஸ்தைஸ்ததா ப்ரபலாரிபிஃ ||7||
7. பூவுலகம் போனால் என்ன
நம்முலகம் இருக்கு தென்று
தன்னிடம் மட்டும் ஆண்டு
தயவுடன் மக்கள் காத்தான்!
புண்ணியம் பெரிதாய்ச் செய்தோன் விண்ணகரம் இருக்குதென்றான்.
அமாத்யைர்பலிபிர்துஷ்டை ர்துர்பலஸ்ய துராத்மபிஃ|
கோஶோ பலம் சாபஹ்றுதம் தத்ராபி ஸ்வபுரே ததஃ ||8||
8. வெளிப்பகையை வென்று விடலாம்
உட்பகைக்கோ உதவி இல்லை!
கள்ள மனம் கொண்ட அமைச்சு,
அள்ளிச் சென்ற தவனின் செல்வம்!
உள்ளமதில் உண்மை இல்லை வெள்ளமான படையும் போச்சு!
ததோ ம்றுகயாவ்யாஜேன ஹ்றுதஸ்வாம்யஃ ஸ பூபதிஃ|
ஏகாகீ ஹயமாருஹ்ய ஜகாம கஹனம் வனம் ||9||
9. ஆட்சியது அகன்று போச்சு
மீள்வதென்ற பேச்சு எதற்கு?
வேட்டை ஆடச் செல்வேன் என்று
ஊட்டி வளர்த்த உத்தம பரியால்
காட்டினுள் கடிதாய்ப் புகுந்தான், மீளவும் பிற வழியை அறியான்!
ஸதத்ராஶ்ரமமத்ராக்ஷீ த்த்விஜவர்யஸ்ய மேதஸஃ|
ப்ரஶான்தஶ்வாபதாகீர்ண முனிஶிஷ்யோபஶோபிதம் ||10||
10. மிருகங்கள் ஒன்றாய் வாழும்
ஒரு இருப்பிடம் தன்னைக் கண்டான்!
மேதஸ் என்னும் முனியின் மேடை
ஆதரவாய் இருக்கும் என்று
உதவியாக இருந்த குதிரை விட்டு பதவிசாய் பக்கம் நின்றான்!

 

99
admin

admin

5 1 vote
Article Rating
Subscribe
Notify of
guest
4 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Parvathi Ganesan
Parvathi Ganesan
6 months ago

ஜயசக்தி. அருமையான பதிவு. தொடர்ந்து பதிவுகளை பெற விருமபுகிறோம். வாழ்த்துகள் சுந்தர கவிஞரே

Santhanam
Santhanam
6 months ago

மிகவும் அற்புதம் கவியோகி சுந்தரம். சப்தசதியின் விளக்கம் தெரிந்துகொள்ளும் பாக்கியம் கிட்டியது. தொடர்ந்து படிக்க ஆர்வமாக உள்ளோம்.

error: தயவு செய்து வேண்டாமே!!
4
0
Would love your thoughts, please comment.x
()
x