தஸ்தௌ கஞ்சித்ஸ காலம் ச முனினா தேன ஸத்க்றுதஃ|
இதஶ்சேதஶ்ச விசரம்ஸ்தஸ்மின் முனிவராஶ்ரமே ||11||
11. வாவென்று முனிவர் அழைக்க
தாவுகின்ற பரியை அகன்று
மாவுலகம் ஆண்ட மன்னன்
ஆவலுடன் அங்கும் இங்கும்
அலைந்து கொண்டு கானகத்தில் நிலையின்றி மனம் தவித்தான்!
ஸோஉசின்தயத்ததா தத்ர மமத்வாக்றுஷ்டசேதனஃ| ||12||
மத்பூர்வைஃ பாலிதம் பூர்வம் மயாஹீனம் புரம் ஹி தத்
மத்ப்றுத்யைஸ்தைரஸத்வ்றுத்தைஃ ர்தர்மதஃ பால்யதே ன வா ||13||
ன ஜானே ஸ ப்ரதானோ மே ஶூர ஹஸ்தீஸதாமதஃ
மம வைரிவஶம் யாதஃ கான்போகானுபலப்ஸ்யதே ||14||
யே மமானுகதா னித்யம் ப்ரஸாததனபோஜனைஃ
அனுவ்றுத்திம் த்ருவம் தேஉத்ய குர்வன்த்யன்யமஹீப்றுதாம் ||15||
அஸம்யக்வ்யயஶீலைஸ்தைஃ குர்வத்பிஃ ஸததம் வ்யயம்
ஸம்சிதஃ ஸோஉதிதுஃகேன க்ஷயம் கோஶோ கமிஷ்யதி ||16||
12-16. என் நாடு என்னாயிற்றோ?
என் மக்கள் என்ன ஆனார்?
என்னை துரத்தி விட்டார்
என்னோர்கள் எப்படி வாழ்வர்?
என் ஆனைக்கு உணவு தராது
பிணைத்து வைத்து நிற்கின்றாரோ?
என் வசம் இருந்தோர் எல்லாம்
எதிரி வசம் ஆனார் இன்று !
பொக்கிஷம் போனதுண்மை
பக்க துணை யாருமில்லை
துக்கம் பெரும் சுமைதான்
அக்கறையாய் மக்களினை
எக்கணமும் நினைத்து அவன்
எண்ணத்தில் வாட்டமுற்றான்!
ஏதச்சான்யச்ச ஸததம் சின்தயாமாஸ பார்திவஃ
தத்ர விப்ராஶ்ரமாப்யாஶே வைஶ்யமேகம் ததர்ஶ ஸஃ ||17||
17. வேதியரின் வீட்டருகே ஒரு
வைசியனை காணலுற்றான்
பேசிடுவோம் என்றவனை
பக்கத்தில் சென்று நிற்க
இக்கானகம் வந்தவரே
நீங்கள் யார் என வினவலுற்றான் !
ஸ ப்றுஷ்டஸ்தேன கஸ்த்வம் போ ஹேதுஶ்ச ஆகமனேஉத்ர கஃ
ஸஶோக இவ கஸ்மாத்வம் துர்மனா இவ லக்ஷ்யஸே| ||18||
இத்யாகர்ண்ய வசஸ்தஸ்ய பூபதேஃ ப்ரணாயோதிதம்
ப்ரத்யுவாச ஸ தம் வைஶ்யஃ ப்ரஶ்ரயாவனதோ ன்றுபம் ||19||
18-19 சோகமே வடிவாக இருக்கின்றீர்
ஆகாரம் உண்டீரோ ஆதரவு உமக்காரோ ?
கேள்வி கேட்ட அரசனுக்கு
அடக்கமுடன் அந்த வைசியனும்
தன்கதையை கூறலுற்றான்!
என்ன சொன்னான் வாருங்கள் சென்று சிறிது கேட்போம்!
வைஶ்ய உவாச ||20||
ஸமாதிர்னாம வைஶ்யோஉஹமுத்பன்னோ தனினாம் குலே
புத்ரதாரைர்னிரஸ்தஶ்ச தனலோபாத் அஸாதுபிஃ ||21||
வைசியன் கூறியது:
20-21 வியாபாரம் செய்கின்ற தனிகர்
குலத்துதித்த வைசியன் நானய்யா!
சமாதி என்ற பெயர் சாத்திரமாய்
எமக்கு வைத்தார் !
விஹீனஶ்ச தனைதாரைஃ புத்ரைராதாய மே தனம்|
வனமப்யாகதோ துஃகீ னிரஸ்தஶ்சாப்தபன்துபிஃ ||22||
ஸோஉஹம் ன வேத்மி புத்ராணாம் குஶலாகுஶலாத்மிகாம்|
ப்ரவ்றுத்திம் ஸ்வஜனானாம் ச தாராணாம் சாத்ர ஸம்ஸ்திதஃ ||23||
கிம் னு தேஷாம் க்றுஹே க்ஷேமம் அக்ஷேமம் கிம்னு ஸாம்ப்ரதம்
கதம் தேகிம்னுஸத்வ்றுத்தா துர்வ்றுத்தா கிம்னுமேஸுதாஃ ||24||
22-24 பணம் மிகச் சேர்த்து வைத்தேன்
குணமில்லா புத்திரரும், குணமிழந்த மனைவியளும்
எனைக் கைகழுவி விட்டு விட்டார்!
தனத்தையும் தாரத்தையும்
தானிழந்த வேளையிலே
கானகம்தான் சுகமென்று
மானமிகு வைசியன் நான்
துன்பமுடன் இருக்கின்றேன்!
என்ன கதி ஆனாரோ
எந்தன் புத்திரர்கள்?
இன்பமுடன் இருக்கிறாரோ இல்லை
துயரத்தால் வாடுறாரோ?
எனக்கு மிகக் கவலை
ஏகாந்தம் இனிக்க வில்லை?
25 புத்திரர்கள் செல்லும் வழி
நல்வழியோ தீ வழியை
யானறிய வழியில்லை!
ராஜோவாச ||25||
யைர்னிரஸ்தோ பவாம்ல்லுப்தைஃ புத்ரதாராதிபிர்தனைஃ ||26||
தேஷு கிம் பவதஃ ஸ்னேஹ மனுபத்னாதி மானஸம் ||27||
வைஶ்ய உவாச ||28||
ஏவமேதத்யதா ப்ராஹ பவானஸ்மத்கதம் வசஃ
கிம் கரோமி ன பத்னாதி மம னிஷ்டுரதாம் மனஃ ||29||
ஐஃ ஸம்த்யஜ்ய பித்றுஸ்னேஹம் தன லுப்தைர்னிராக்றுதஃ
பதிஃஸ்வஜனஹார்தம் ச ஹார்திதேஷ்வேவ மே மனஃ| ||30||
கிமேதன்னாபிஜானாமி ஜானன்னபி மஹாமதே
யத்ப்ரேம ப்ரவணம் சித்தம் விகுணேஷ்வபி பன்துஷு ||31||
தேஷாம் க்றுதே மே னிஃஶ்வாஸோ தௌர்மனஸ்யம் சஜாயதே ||32||
அரசன் கூறியது:
26-28 பேராசை மிகக் கொடிது
உந்தன் பேச்சால் யானறிந்தேன்!
விலக்கி விட்ட உறவினரை
நீர் விலக்காத விதமென்ன?
துரத்தி விட்ட துணையதனை
மனதால் துறந்து விட முடியாதா?
வனம் புகுந்த பினன்னுமவர்
நினைவகற்ற அறியீரோ!
கானகத்து புகுந்த பின்னும்
நினைவகத்து வில்லை!
வைசியன் கூறியது:
29-32 ஆமாம், அப்படித்தான், ஆமோதிக்கின்றேன்
வனத்தகத்து வந்த பின்னும்
மனத்தகத்து மனைவி மக்கள்
நினைவகத்தில் நீங்க வில்லை!
என் செய்வேன் வகை அறியேன்!
பேராசை குணத்தாலே
பெற்ற மக்கள் துரத்தி விட்டார்
ஆனாலும் அவர் மீதில்
ஆசையது நீங்க வில்லை!
நன்றாக அறிந்திருந்தும்
ஏனென்று விளங்கவில்லை!
33 குணமில்லா சுற்றமென்று
நினைவினிலே நின்றாலும்
அன்பும் அரவணைப்பும்
அகற்றத்தான் முடியவில்லை!
பெருமூச்சு மனக்கலக்கம்
சிறிதும் அகலவில்லை!
34 அன்பில்லா அவர்களிடம்
போகட்டும் எப்படியோ என்று
தாகம் நீங்கவில்லை!
மனம் கடிதாய் ஆகவில்லை!
ஏனென்று புரியவில்லை
நான் என்ன செய்திடுவேன்?
மாகண்டேய உவாச ||34||
ததஸ்தௌ ஸஹிதௌ விப்ர தம்முனிம் ஸமுபஸ்திதௌ ||35||
ஸமாதிர்னாம வைஶ்யோஉஸௌ ஸ ச பார்திவ ஸத்தமஃ ||36||
க்றுத்வா து தௌ யதான்யாய்யம் யதார்ஹம் தேன ஸம்விதம்|
உபவிஷ்டௌ கதாஃ காஶ்சித்ச்சக்ரதுர்வைஶ்யபார்திவௌ ||37||
மார்கண்டேயர் கூறியது :
35-37 சுரதனும் சமாதியும்
சங்கை மிகக்கொண்டு
மேதஸ் என்னும் முனிவரிடம்
மரியாதையுடன் சென்றார்!
அவரருகில் வீற்றிருந்து
அனேகம் பேசினார்கள்!
அதையெல்லாம் கூறுகிறேன்
வேதியரே கேட்டிடுவீர்!

ஜயசக்தி. மிக்க மகிழ்ச்சி. ஆவலுடன் தொடர்ச்சியை எதிர்பார்க்கிறோம். வாழ்த்துகள் சுந்தர கவிஞரே