(பத்து பனிரெண்டு வருடங்கள் முன்பு நான் எழுதிய இந்த வசனக் கவிதையை பாதுகாத்து எனக்கு அனுப்பிய லதா மன்னிக்கு நன்றிகள் உரித்தாகுக)
அந்தி சாயும் வேளையிலே
ஆங்கொரு காக்ஷி’
ஆங்காங்கு அலைகின்ற
பாங்கான புறாக்கள் இரண்டு
தாங்காத மகிழ்ச்சியிலே தினைத்து நின்றன போலும்!
எங்கள் மாடியிலே தேங்கின கோடியிலே ! ஆங்கிரண்டு முட்டையினை அந்த புறா இட்டிடவே
அதுவே எங்கள் பேச்சாகி பொதுவாகிப் போனதுவே !
பெண்புறா அடைகாக்க ஆண்புறா அதனருகில் !
கல்யாண மறுநாளே
பொல்லாப்பு சில கூறி
விலகிடும் மக்கள் அல்ல !
ஒற்றுமைக்கு பெயராகி
ஒன்றோடொன்று வாழ்ந்ததுவே !
பெண்மையது சிறந்ததுதான்!
பொறுமைக்கு ஓர் புகழ் உருதான் ! மங்கையவள் தன் வயிற்றில் மகவை சுமப்பது போல் அங்கந்த முட்டைகளை அடைகாத்து வந்ததுவே !
உணவதனை வைத்தாலும் உட்கார்ந்த இடம் விட்டு ஓரடியும் நகரவில்லை ! ஏகாதசி விரதத்தில் கூட ஏகமாக விழுங்குகின்ற போகமே ப்ரதானமான பிரபஞ்ச வாசி நாங்கள் !
அதுவோ தன் உறவிற்காக
உணவதனை (அருகில்) வைத்தாலும் உட்கார்ந்த இடம் விட்டு
ஓரடியும் நகரவில்லை !
நாட்கள் நகர நகர எங்கள் ஆச்சர்யம் தாங்கவில்லை !
அறிவினாலே கதையெழுதி
காதலுக்கே பாட்டெழுதி அன்புக்கு படமெடுத்து முடிவில் மோதலாக முடிந்துவிடும் விஞ்ஞான மனிதரல்ல
தற்பெருமை தான்பேசி
பிறரையே புறம் பேசி தரமில்லா வாழ்க்கையல்ல!
பிரசவம் பார்த்திடவோ பணத்தை
பிடுங்கிடுவார் படித்த வைத்தியர்கள் இடுக்கில் வாழ்ந்தாலும்
கொடுக்கல் வாங்கல் இல்லை
வாட்டம் எதுவுமின்றி
முட்டை அடைகாக்கும்
நாட்டம் அதற்குண்டு
அந்த
மாடப்புறா மாண்புகள் பல உண்டு பொரித்த குஞ்சுகள். தோல் உரிக்கும் வரையிலுமே தரிக்கும் தாய்மையினை தகைமை அதற்குண்டு !
வேதம் படிக்கும் முன்பே வரதட்சிணை வரும் என்று பாரபட்சம் பார்க்கின்ற மனித சார பக்ஷி அதுவல்ல !
சிறகு முளைத்தவுடன் சீறிப் பறந்தாலும் பாரபட்சம் இல்லாமல் பருந்து வந்திடுமோ ? விருந்தாய் ஆகிடுமோ நம் உறவான குஞ்சுகள் அதற்கு விருந்தாய் ஆகிடுமோ என பொறுப்பாய் பாதுகாக்கும் !
பின்னாளில் பலனளிக்கும் என்ற
தன்னார்வம் அதற்கில்லை
அமெரிக்கா சென்றிடுவான்
நம் சமையலுக்கு சீர் கொணர்வான் என்ற எதிர்பார்ப்பு எதுவுமின்றி
பொத்தி பொத்தி வளர்த்திடுமே !
அந்த பறவையின் மனதினையே இந்த மனித குலம் கொள்ளலையே !
சொந்தமாக இருந்தாலும்
சொத்துக்கள் இல்லையென்றால்
பத்துகாசு பிரயோசனமோ என
பகர்ந்திடுவார் இச்சகத்தார்
அகத்தினிலே நோக்கிடுவோம் அஹங்காரம் நீக்கிடுவோம
பிள்ளைகள் வளர்ப்பதிங்கே
கொள்ளை அடிக்கயில்லை !
அள்ள அள்ள குறையாத
அன்பே நம் நோக்கம்!
அந்த அன்பை உணர்த்தி நிற்கும்
அவ்விரண்டு பறவைகளும்.
