குழந்தைகளே குழந்தைகளே இங்கே வாருங்க
அழுகையை நிறுத்தி விட்டு கவிதை கேளுங்க
பெரியோரின் அறிவுரையை ஏற்று வாழுங்க
தரிசு நிலம் கை பட்டால் தங்கம்
ஆகுங்க
கைபேசி காலமிது தெரிந்து கொள்ளுங்க
தை மாதம் பிறந்து விடும் வழியைப் பாருங்க
பொய் பேசா கொள்கையினை பழகிக் கொள்ளுங்க
தொய்வில்லா மனம் தன்னை துணையாய்க் கொள்ளுங்க
தமிழ் மொழியை வாழ வைத்த ஒரு தாத்தா இருக்கின்றார்
தமிழ்ச் சுவடி நூலெல்லாம் நம்மை அறியச் செய்தவர்
அமிழ்தினும் இனிய மொழி அறிந்து கொள்ளுங்க
கமழுகின்ற தென்று சொன்னால் அது அவர் உழைப்பு தானுங்க
தொன்மைக்கும் தொன்மையது தமிழே உணருங்க
கன்ம யோகம் ஞான யோகம் அதிலே இருக்குதானுங்க
இன்று அதை மாற்ற பார்க்கும் சில பதருதானங்க
என்றும் அதை நம்பாதீர் பகுத்தறிவால் அறிந்து பாருங்க
சிலம்பும் பதியும் சொல்லும் கொள்கை இறைமை தானுங்க
துலங்கும் உண்மை ஊர்ந்து பார்த்தால் இன்றே படியுங்க
அலங்க மலங்க அடித்து விட்டார் அறிவால் பாருங்க
கலங்காமல் கண்ணகியின் கதையைப் படியுங்க
இராம காதை தந்த கம்பன்தான் உண்மைத் தமிழன்ங்க
இராம நாமம் சொல்லிடுவார் சிவ வாக்கியர் தமிழன்ங்க
வேண மட்டும் சொல்லி நின்றார் தெய்வம் உண்டுதானுங்க
கோணல் புத்தி கொண்டவரின் கூட்டம் விலக்குங்க
படிப்போடு பண்பதையும் வளர்த்து கொள்ளுங்க
துடிப்போடு தெய்வத்தினை துதித்து நில்லுங்க
தடித்து நிற்கும் அறியாமை அகற்றிக் கொள்ளுங்க
கடித்து வாழும் விலங்கு அல்ல கருணை கொள்ளுங்க
இந்த நாள் உமது என்று உணர்ந்து கொள்ளுங்க
சொந்த பந்தம் கேளிர் சுற்றம் சூழ வாழுங்க
உந்தி செல்லும் வாகனம் உன் அறிவு தானுங்க
முந்தி இருந்த ஒரு தெய்வம் இன்றும் இருக்குங்க
ஜாதி இல்லை உண்மைதான் ஒத்து கொள்ளுங்க ஆனா
ஜாதிக்கொரு கூட்டம் வந்து ஓட்டு கேட்குங்க
ஆதியிலே இருந்த பொருள் ஒன்று தானுங்க அது
நீதி தர்மம் காத்து நிற்கும் தெய்வம் தானுங்க
ஒன்றுதான் பலவாகி ஆகிப் போச்சுங்க
கன்று ஈன்ற பசு மாட்டுக் கதையாய் ஆச்சுங்க
பண்டு வாழ்ந்த மூத்த குடி தமிழன் தானுங்க
ஆண்டு பல ஆனாலும் இந்த உண்மை ஒன்றுதானுங்க

கவிஞரின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தும் கவிதை. வயது வந்தோரும் உணர வேண்டிய செய்தி.