ராகம் : நாதநாமக்ரியா
குரல் : ஶ்ரீமதி அபர்ணா
பல்லவி
எப்பாடு பட்டாலும் கரையேறு
இந்த ஸம்ஸார சக்ரம் மிகவும்
பொல்லாது (எ)
அனுபல்லவி
நான்மறை கூறும் நாதனின் தாள்களை
இன்றே நன்றாய் பிடித்துக்கொண்டு (எ)
சரணம்
தீப்பற்றி கொண்டு தவித்திடும் குருடன் போல்
திங்கள் முழுதும் உணவு திங்காத மனிதன் போல்
எங்கே எங்கே என் குரு நாதன் என்று
அங்கேயும் இங்கேயும் இன்றே தேடி (எ)
பாரென்று சொன்னால் பார்க்காது கண்கள்
பார்க்காதே என்று சொன்னால் பார்க்கும்
கேளென்று சொன்னால் கேட்காது செவிகள்
கேட்காதே என்று சொன்னால் கேட்கும்
நினைக்காதே என்றால் நினைக்கும் நெஞ்சம்
நினையென்று சொன்னால் நினைக்காது நீங்கும் (எனவே) (எ)
– கவியோகி நாகசுந்தரம்

Fine
நன்றி நமஸ்காரம்