இராகம்: முகாரி
குரல்: ஶ்ரீமதி அபர்ணா
இன்றே கண்ணன் பாதம் பணி
என்றே இயம்பும் மறையும் அறி (இ)
யமுனைக் கரை இறைவன்
அமுதம் போல் நிறைபவன் (இ)
ஆயர் குலப் பெண்களின் ஆண்டவன்
தூய மனம் கொண்ட யசோதை மைந்தன்
சாய்ந்த நிலை நின்று வேய்ங்குழல் இசைப்பவன்
பாய்ந்து கம்சனை பயமின்றி கொன்றவன் (இ)
கோதையின் மலர் மாலை கழுத்திலே அணிந்தவன்
வாதையெல்லாம் நீக்கி விருப்பமெல்லாம் அருள்பவன்
பாதையினைக் காட்டி பக்தருக்கு பரகதி தருபவன்
காதைத் திறந்து அவன் நாமத்தை கேளுங்கள் (இ)
