குந்தியைப் போல கஷ்டம் தா என்று
யாரும் கேட்க விரும்பவில்லை,
எனவே யாருக்கும் வைராக்கியம் இல்லை!
ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
அர்ஜுனனைப்போல ஆண்டவனை
தோழனாக யாரும் கொள்ளவில்லை
எனவே யாருக்கும் அன்பு இல்லை!
ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
பீஷ்மரைப்போல பிரம்மச்சரியம்
யாரும் அனுசரிக்க வில்லை
எனவே யாரும் பிதாமகர் இல்லை!
ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
விதுரரைப் போல விவேகம் யாருக்கும்
இல்லை,
எனவே யாரும் விவேகி இல்லை!
ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
திரவ்பதியைப் போல சரணாகதி யாரும்
செய்வதில்லை
எனவே யாரும் கடவுளுக்கு உறவினர் இல்லை!
ஆனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
நாம் தவறு செய்யும்போது கடவுள்
பார்க்கவில்லை என்பதில்
நாம் எல்லாரும் தர்மரைப் போல
உறுதியாக நம்புகிறோம்.
அதனால் நாம் தர்மரைப் போல என்று நிச்சயமாய்க் கூறலாம்!
(குறிப்பு: தான் சூதாடும்போது கண்ணன் பார்த்து விடக்கூடாது என்று நினைத்தார் தர்மர்)