கெஞ்சினேன் காதலியை!
செவி சாய்க்கவில்லை,
மெளனமாய் இருந்தேன்
மடியில் வந்து அமர்ந்தாள்!
கொஞ்சினேன் மனைவியை
நெஞ்சம் நெகிழவில்லை,
மெளனமாய் அமர்ந்தேன்
என்னங்க என்றாள்!
அழைத்தேன் நண்பனை அளவளாவ
வாளாய் இருந்தான் வராமல்,
மெளனமாய் நின்றேன்
கை பிடித்து சிரித்தான்!
கைபேசியை கையில் வைத்து
கொண்டிருந்தேன் கால் எதுவும்
வரவில்லை,
மெளனமாய் அமர்ந்தேன்
சிணுங்கியது செல்லமாய்!
மெளனத்தின் அழைப்பு மொழி
மிகச் சிறந்தது என்பதை
உணர்ந்தேன்!
