உம்மை விட்டால் வேறு கதி உளதோ
உமையாள் மைந்தா உத்தம குமாரா
(உ)
மனிதரில் யாரும் உதவிக்கு வருவாரில்லை
தனியாக எனக்கென்று தரிசு நிலம் கூட இல்லை
(உ)
நாளும் உடலை நமன் என்னும் காலம் நாவால் விழுங்குது
கோளும் கட்டம் போட்டு காட்டமாய் எனை வாட்டுது
மாளும் மண்ணிலே என் மனம் இன்னும் மயங்குது
தோளியர் கண்ணில் நின்று தோத்திரம் மறக்குது (உ)
வருவாய்
எதிரே வருவாய்
என் எதிரே வருவாய்
என் கண் எதிரே வருவாய்
எழிலுடன் என் கண் எதிரே வருவாய்
என்னிறைவா எழிலுடன் என் கண் எதிரே வருவாய்
வந்தென்னை ஆள்வாய் (உ)
