சோபையுடன் வந்திட்டும் சோப கிருது வருடம் வருடம்
தாபத்தால் வரும் நோய்த்தொற்று விலகும் என்றும் என்றும்
ஆபமென்றால் தண்ணீராம் நிறைய பொங்கிடட்டும்
கோபமென்ற குணம் விட்டால் வரும் இன்பம் இன்பம்
வம்பு தும்பு அனைத்துக்கும் ஆசை மூலம் மூலம்
தும்புரு போல் இசைத்திடுவோம் அன்பின் பாடம்
கம்பரைப் போல் இணையில்லை என்றான் புலவன்
கம்புக்கும் கூழுக்கும் (இன்று) கவிதை எழுதும் கூட்டம் கூட்டம்
என்புக்கும் தோலுக்கும் உலகம் அலையும் அலையும்
நம்பிக்கை வைத்து விடு இறை காக்கும் காக்கும்
தும்பிக்கையான் பாதம் சோபிக்கும் மனதில் என்றும்
அம்பிகை அருளிடுவாள் விட்டகலும் மாயத் தோற்றம் தோற்றம்
விளையட்டும் பயிர்த் தொகைகள் மண்ணில் என்றும்
துளைபோட்ட குடத்தைப் போல் ஒழுகும் பொய்மை பக்தி
சளைக்காத முயற்சிதானே வெல்லும் வெல்லும்
அளைக்கழிச்சல் செய்யும், வேண்டாம் மாய்கைத் தோற்றம்.
சோபமென்றால் கருதுவது எல்லாம் கிட்டும் கிட்டும்
சாபமெல்லாம் அருளாகும் குரு பார்வை போதும்
மாபாரதம் என்ற போர் மனதினுள் ஆட்டம் போடும்
காப்பாற்றும் கடவுள் எம்மை, சோபகிருது வரட்டும் வரட்டும்!
– _வேதாந்தக் கவியோகி நாகசுந்தரம்_
