எஸ்கேலட்டர்
முன்பு படிகள் நிற்கும்,
நாம் ஏறுவோம்,
இன்று நாம் நிற்கிறோம்
படிகள் ஏறுகின்றன!
பள்ளிக்கூடம்
முன்பு பள்ளியில்
படித்து
வீட்டில் விளையாடுவோம்
இப்போது
வீட்டிற்குள் படித்து வெளியில்
விளையாடச் செல்கிறோம்!
கடிதம்
அன்று
போஸ்ட் மேன் வர
ஆவலுடன் வாயிலில்
காத்திருப்போம்.
இன்று
வாட்ஸ்அப்பில் வருவது
விரக்திதான்
தருகிறது!
ஃபோன்
போனில் என்ன
முகமா தெரிகிறது
என்று சொல்லுவார்கள்
இப்போது
போனில் முகமும்
தெரிகின்றது
கைநாட்டு
கையெழுத்து போடத்
தெரியாதவர்களை
கை நாட்டு என்று
பரிகசிப்பார்கள்!
இன்று
கை நாட்டு வைத்தால்தான்
அலுவலகத்திற்குள்ளேயே
நுழைய முடிகிறது
பயணம்
அன்று
ரயில்களில்
பயணிக்கும் போது
பல நண்பர்கள் அறிமுகம்
ஆவார்கள்.
இன்று விமானத்தில்
பக்கத்து இருக்கையில்
இருப்பவரைக் கூட
காண விரும்பாமல்
கண்களை பட்டுத் துணியால்
மூடிக் கொள்கிறோம்!
திரைப் பாடல்கள்
அன்றைய
திரைப் பாடல்கள்
மரபுக்குள் அடங்கி
மனிதன் மனதை
சுத்தப்படுத்தின!
இன்றோ
மாராப்புக்குள் அடங்கி
மனதை
அழுக்காக்குகின்றன.
உணவு
அன்று
வீட்டில் சமைத்த உணவை
பார்க்கில் அமர்ந்து
உண்ணுவோம்.
இன்று
வெளியில் இருந்து
வந்த உண்வை
வீட்டிற்குள் அமர்ந்து
உண்ணுகிறோம்!
