Doctor
யாரையும் நான் காப்பாத்திடுவேன்
Lawyer
எவரையும் என்னால் வெளியே கொண்டு வரமுடியும்
Judge
யாரா இருந்தாலும் நான் பாரபக்ஷமின்றி செயல்படுகிறேன்
Police
யாரா இருந்தாலும் கவலை இல்லை, அடித்து நொறுக்கி விடுவேன்
Architect
யார் இப்படி செஞ்சது. இது இப்படி இருக்கக் கூடாது, நான் சரியாக்கித் தருகிறேன்
Astrologer
எந்த கிரகமோ சரியாய் இல்லை, பரிகாரம் செய்தால் சரியாகி விடும்
Driver
எப்படிப்பட்ட ரோடுலயும் எந்த வண்டியையும் நான் ஓட்டுவேன்
Officer
எல்லாரும் ஒழுங்கா வேலை செய்யணும் இல்லன்னா மெமோதான்
Engineer
எந்த மெஷினையும் எங்கிட்ட கொடு சரியாக்கி விடுகிறேன்
Teacher
எந்த சந்தேகமானாலும் என்கிட்டே கேளுங்க
Scientist
எல்லாத்துக்கும் விடை எங்கிட்ட இருக்கு
Poet
எந்த தலைப்பு கொடுத்தாலும் எழுதுவேன்
Musician
எந்த ராகத்தையும் என்னால சிறப்பா பாட முடியும்
Saint
எதைக் கண்டும் எனக்கு பயமில்லை, எல்லாமே மாயைதான்
Politician
எந்த தொகுதில நின்னாலும் என்னால ஜயிக்க முடியும்
God
என்ன மறந்துட்டு எல்லாரும் பேசுகிறார்கள்

தான் தான் எல்லாவற்றையும் செய்கிறோம் என்ற நினைப்புக்குச் சரியான சவுக்கடி கடைசி சொற்றொடர். மிக நன்று
நன்றி ஐயா!