அரைக்கிறாளே ! அந்தப்பெண்
பக்த ஸ்ரீ கபீர்தாசரின் ஒரு பாடல் இப்படி ஒரு தமிழ்ப் பாடலைத் தந்தது!
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
அரைபட்டு வீழும் வாழ்க்கையம்மா இது
கால உரலில்
அரைபட்டு வீழும் வாழ்க்கையம்மா
இந்த ஸாகரம் இந்த காவிரி
இந்த குன்றுகள் இந்த கோபுரம்
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
அத்தனை மறந்து
அரியணை நினைந்து
எத்தனை வாழ்நாள்
எத்தனை வாழ்ந்தும்
நரைதிரை மூப்பென்னும்
நாட்கள் கடந்தும்
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
மனமெனும் அரிசியை
காமக்ரோத உலக்கையால்
தினமும் இடிக்கிறாளே மாயை
தினமும் இடிக்கிறாளே
தினவெடுத்தலையும்
காளை போல் அலைந்திட
வேண்டுமோ
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
நீயென்றும் நானென்றும்
பேயென்றும் பெண்னென்றும்
தாயென்றும் மகவென்றும்
தரணியில் திரும்ப திரும்ப பிறந்து
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
வேதம் படித்தென்ன
விவேகம் வேண்டுமே
நாதம் பாடியே
நர்த்தனம் ஆடியே
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
கண்டதைத் தின்று
காலத்தை ஓட்டி
மூலத்தை அறியாத
மூடருடன் கூடி
தூலமாம் உடலிதை
தூணிலே கட்டி
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
மிஞ்சுவதென்ன கடைசியில்
மிஞ்சுவதென்ன
அஞ்சு பூதத்தில்
கஞ்சுக ஜீவன் துஞ்சி வீழுவானே
எஞ்சிய வாழ்வில் அஞ்சு அக்ஷரத்தை
கெஞ்சி கூறுவாயே
அரைக்கிறாளே ! அந்தப்பெண்
கால உரலிலே கட்டி வைத்து
நம்மை அரைக்கிறாளே!
