சும்மா இருந்துவிடு மனமே !

சும்மா இருந்துவிடு மனமே சற்று
(ஸ்ரீ பெரியவாளின் உபதேசத்தில் உதித்த ஒரு கவிதையை இங்கு பகிர்கிறேன்)
சும்மா இருந்துவிடு தினமே
அம்மா அப்பா என்று அலறுவதேனோ
எம்மான் இறைவன் அவன் செயலென்று
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
காலைப்பிடித்திழுக்கும் கர்மவினை திரு
மாலைப் பிடித்துவிடு தீர்ந்து விடும்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
கண்ணால் காண்பதெல்லாம் கடவுள் அதுவே
விண்ணில் தெரியுமந்த விண்மீன்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
பசிக்கும் வயிறு நன்றாய் ருசிக்குமந்த நாவு
விசித்து அழுவதற்கே அந்த கண்கள் (எனவே)
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
உதவி செய்யவென்று ஓடுவாய் அவர் உன்
உதவி பெற்றபின்பு நில்லா தோடுவார்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
நன்மை தீமையெல்லாம் அந்த நாரணன்
தன்மை என்று நீ தெரிந்து கொள்ளுவாய்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
இன்பம் துன்பமென்னும் இரட்டையர் அவர்
வந்து பிறந்ததிந்த வையகம்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
ஆதி சங்கரரும் இதையே சொன்னார் அந்த
யதியின் உபதேசம் நீ கேட்பாய்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
சும்மா இருக்கையிலே ஓர் அலைச்சல்
நம் அலைச்சல் நடுவிலேயோ ஓர் அமைதி
(Action while in inaction, Inaction while in action – Sri Karai Siddhar)
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
இனியொரு பிறவி உனக்கேனோ வெறும்
சினிமா போல் அல்லவோவிவ் வாழ்க்கை
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
அன்னை தந்தை பலர் உனை பெற்றார்
மனைவி மக்களோ உனை தொடர்ந்தார்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
இறக்கும்போதி லெவர் உனைத்தொடர்வார்
மறந்து போகுமிந்த மண்னொரு நொடியில்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
வேதசிகையும் இதைக் கூறும் உன்மேனி
சிகையும் வெறும் தோலாம்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே
தினமும் கொஞ்சம் தனியாய் இருந்துபாரு
கணமும் இறைதாளை மறவா திருப்பாய்
சும்மா இருந்துவிடு மனமே சற்று
சும்மா இருந்துவிடு தினமே

166

Author: admin

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments